அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..? ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்.. பிரபல வங்கியில் வேலை வாய்ப்பு..! 220 காலியிடங்கள்..!

தர்ணாவில் ஈடுபட்ட திக் விஜய் சிங் போலீசாரால் கைது

பெங்களூருவில் தங்கியுள்ள மத்திய பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏககளை சந்திக்க முயன்ற, மூத்த தலைவர் திக்விஜய்சிங்கை போலீசார் கைது செய்து தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.

ufRtWkww


மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இக்கட்சியை சேர்ந்த 22 அதிருப்தி எம்எல்ஏ.க்கள், ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் கட்சியில் இருந்து விலகினர். இதனால், கமல்நாத் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. அதிருப்தி எம்எல்ஏ.க்கள் 6 பேர் அனுப்பிய ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக் கொண்டுள்ளார். மற்ற 16 எம்எல்ஏ.க்களின் ராஜினாமா இதுவரை ஏற்கப்படவில்லை. 6 எம்எல்ஏ.க்களின் ராஜினாமாவை தொடர்ந்து, சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் பலம் 108 ஆக குறைந்துள்ளது. பெரும்பான்மைக்கு 112 எம்எல்ஏ.க்கள் தேவை என்ற நிலையில், அதிருப்தி எம்எல்ஏ.க்கள் இணைந்ததால் பாஜ பெரும்பான்மை பலம் பெறும் நிலையில் உள்ளது.

இதனிடையே, பட்ஜெட் கூட்டத் தொடரில் உரையாற்றிய கவர்னர் லால்ஜி டாண்டன் கடந்த 16ம் தேதி பேரவையில் பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும் என்று முதல்வர் கமல்நாத்துக்கு உத்தரவிட்டார். ஆனால், சபாநாயகர் பிரஜாபதி, கொரோனா வைரஸ் பாதிப்பை காரணம் காட்டி பேரவை கூட்டத்தை மார்ச் 26ம் தேதி வரை ஒத்திவைத்துள்ளார்.

இந்நிலையில், பெங்களூரில் உள்ள ரமாடா ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களை பார்த்து பேச்சு வார்த்தை நடத்த மத்திப்பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் நேரில் வந்தார். ஆனால், எம்எல்ஏக்களை பார்க்க போலீசார் அனுமதி மறுத்ததால் திக்விஜய் சிங் தனது ஆதரவாளர்களுடன் ரமாடா ஹோட்டல் முன் சாலையிலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவரை போலீசார் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள திக்விஜய் சிங் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர்களது குடும்பத்தினர் எங்களிடம் தெரிவித்தார்கள். எம்எல்ஏக்கள் திரும்பி வருவார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். நான் தனிப்பட்ட முறையில் 5 எம்.எல்.ஏக்களுடன் பேசினேன், அவர்கள் தங்களை இங்கு சிறைபிடித்து வைத்திருப்பதாக சொன்னார்கள் என கூறினார். 

 

1newsnationuser4

Next Post

அரசியலில் டிடிவி தினகரன் ஒரு கொரோனா வைரஸ்.. எந்த கட்சியும் அவருடன் கூட்டணி அமைக்காது.. புகழேந்தி விமர்சனம்..

Wed Mar 18 , 2020
தமிழக அரசியலில் டிடிவி தினகரன் ஒரு கொரோனா வைரஸ் என்றும், அவருடன் எந்த கட்சியும் கூட்டணி அமைக்க முடியாது எனவும் அமமுகவில் இருந்து விலகிய புகழேந்தி விமர்சித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுகவின் புதிய தலைமை அலுவலகத்தை அக்கட்சியின் பொதுச் செயலளார் டிடிவி. தினகரன் கடந்த வாரம் திறந்து வைத்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், 2021 சட்டமன்ற தேர்தலுக்கு அமமுக தயாராகி வருகிறது என்று தெரிவித்தார். மேலும் சிறந்த […]
அரசியல் கணக்குப் போடும் அதிமுக..! கலையப்போகிறதா அமமுக?

You May Like