அரசியல் விரக்தி காரணமாக காங்கிரஸ் கட்சியினர் வெட்கமின்றி பொய்யை பரப்பி வருவதாக ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

இந்திய – சீன எல்லையான லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15-ம் தேதி ஏற்பட்ட மோதலில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சூழலில் எல்லை விவகாரம் தொடர்பாக, நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கட்சி கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நமது எல்லைக்குள் யாரும் ஊடுருவவில்லை என்றும், நமது நிலைகளையும் யாரும் கைப்பற்றவில்லை என்றும், தெரிவித்தார். மேலும் இந்தியா அமைதி மற்றும் நட்பையே விரும்பினாலும், நாட்டின் இறையாண்மையை நிலைநிறுத்துவதே முதன்மையானது எனவும் மோடி கூறியிருந்தார்.

இதனையடுத்து, இதுகுறித்து இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த ராகுல்காந்தி “பிரதமர் இந்திய நிலப்பரப்பை சீன ஆக்கிரமிப்பிடம் ஒப்படைத்துள்ளார். அப்பகுதி சீனாவின் வசம் இருந்தால், ஏன் நமது வீரர்கள் கொல்லப்பட்டனர். எங்கு அவர்கள் கொல்லப்பட்டனர்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல்காந்தியின் ட்வீட்டிற்கு பதிலளித்துள்ளார். அவரின் பதிவில் உங்கள் தாத்தா நேருவின் கீழ் உள்ள காங்கிரஸ்ம் காஷ்மீரில் மூன்றில் ஒரு பகுதியை பாகிஸ்தானிடம் ஒப்படைத்தது. அது இப்போது POK (Pakistan occupied kashmir) என அழைக்கப்படுகிறது. பின்னர் அக்ஷய் சின் உட்பட இந்தியாவின் 40000 சதுர மீட்டர் நிலப்பரப்பை சீனாவிடம் ஒப்படைத்தார். ஆனால் இப்போது ஆனால் காங்கிரஸ் கட்சியினர், அரசியல் விரக்தியில் வெட்கமின்றி பொய்யை பரப்பி வருகிறீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.