“காந்திய கொன்னவங்களுக்கு என்ன சுடுறது கஷ்டமா.?..” ஈஸ்வரப்பா கொலை மிரட்டலுக்கு காங்கிரஸ் எம்பி பதிலடி.!

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது இது தொடர்பாக தென் மாநிலங்களுக்கும் மத்திய அரசிற்கும் இடையே மோதல் சூழல் உருவாகியுள்ளது. பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த மோதல் மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. மாநிலங்களின் வரிப்பணத்தை பெற்றுக்கொண்டு மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்கள் குற்றம் சாட்டியிருந்தன. இது தொடர்பாக பேசிய கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி டி கே சுரேஷ் மத்திய அரசு, தென் மாநிலங்களை தொடர்ந்து புறக்கணித்து வந்தால் நாங்கள் இணைந்து தனிநாடு கூற வேண்டிய சூழ்நிலை உருவாகும் என தெரிவித்திருந்தார்.

இவரது இந்தக் கருத்து மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய அமைச்சர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் இவரது கருத்திற்கு கடும் கண்டனத்தை முன் வைத்தனர். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிஜேபியின் மூத்த தலைவர் ஈஸ்வரப்பா தனிநாடு கூறும் டி.கே சுரேஷ் சுட்டு கொலை செய்யப்பட வேண்டும் என தெரிவித்திருக்கிறார். இது நாட்டில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து இருக்கிறது. இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் நாட்டில் பிரிவினை வாதத்தை தூண்டும் காங்கிரஸ் எம்பி டி.கே சுரேஷை சுட்டுக் கொலை செய்ய வேண்டும் என மிரட்டும் தொணியில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

இதனால் கர்நாடக அரசியலில் கடும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு பதிலடி கொடுத்து பேசிய கர்நாடக மாநிலத் துணை முதல்வரும் டி.கே சுரேஷின் சகோதரருமான டி .கே சிவகுமார் ” இதற்கு முன் எங்கள் அப்பாவை சுட்டு கொலை செய்வோம் என்று கூறினார்கள் அப்போது தகுந்த பதிலடி கொடுத்தோம். அவர்களுக்கு தைரியம் இருந்தால் என் சகோதரரை சுட்டுப் பார்க்கட்டும். இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சுவோர்கள் நாங்கள் இல்லை” என தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக பேட்டியளித்த டி.கே சுரேஷ் ” நான் பிரிவினை வாதம் கேட்டு யாரையும் தூண்டவில்லை. ஈஸ்வரப்பாவின் வீட்டிற்கு நானே செல்கிறேன். அவருக்கு தைரியம் இருந்தால் என்னை சுட்டு கொலை செய்யட்டும். காந்தியை கொலை செய்தவர்கள் தானே இவர்கள். என்னை கொலை செய்வது அவர்களுக்கு கடினமாகவா இருக்கப் போகிறது .? என தெரிவித்திருக்கிறார். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பிஜேபி கட்சிகளுக்கு இடையேயான போர் முற்றி வருகிறது.

Next Post

உ.பி.யில் வக்கிரத்தின் உச்சம்.! ஆபாச படங்களை பார்த்து 5 வயது சிறுமி வன்புணர்வு.! 8 மற்றும் 10 வயது சிறுவர்கள் இருவர் கைது.!

Sun Feb 11 , 2024
உத்திரபிரதேசத்தில் தனியார் பள்ளியில் படித்த 5 வயது மாணவியை, உணவு இடைவேளையின் போது அதே பள்ளியில் படித்து வந்த இரண்டு மாணவர்கள் வன்புணர்வு செய்துள்ளனர். ஆபாச வீடியோக்களை பார்த்து இவ்வாறு செய்ததாக அந்த இரு சிறுவர்களும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று, உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கோண்டா மாவட்டத்தில் அமைந்திருக்கும் தானேபூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5 வயது சிறுமி படித்து வந்தார். உணவு இடைவேளையின்போது அதே […]

You May Like