வைரஸ் தொற்றுக்கும் மூளை புற்றுநோய் தீவிரமடைவதற்கும் இடையே உள்ள தொடர்பு…! IIT புதிய கண்டுபிடிப்பு

புற்றுநோயை உண்டாக்கும் எப்ஸ்டீன் பார் வைரஸ் கிருமி  நரம்பு செல்களைத் தாக்கி, கொழுப்பு அமிலங்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதக் கூறுகள் போன்ற உயிரி மூலக்கூறுகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது, இது மத்திய நரம்பு மண்டலம் மற்றும் மூளை புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

எப்ஸ்டீன் பார் வைரஸ்  வைரஸ் மனிதர்களுக்கிடயே மக்கள்தொகையில் பரவலாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது பொதுவாக எந்தத் தீங்கும் விளைவிப்பதில்லை, ஆனால் நோயெதிர்ப்பு சக்தியில் பாதிப்பு அல்லது நோயெதிர்ப்புத் திறன் குறைதல் போன்ற சில அசாதாரண நிலைகளில் இந்த வைரஸ் உடலுக்குள் மீண்டும் செயல்பட நேரிடுகிறது. இது புர்கிட்டி லிம்ஃபோமா என்று அழைக்கப்படும் நிணநீர் மண்டல புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய், மல்டிபிள் க்ளரோசிஸ் எனும் தண்டுவட மரப்பு நோய் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். முந்தைய ஆய்வுகள் பல்வேறு நரம்பு சிதைவு நோய்களில் ஈபிவி ஈடுபாட்டின் தொடர்பினை குறித்து விளக்கம் அளித்தன. இருப்பினும், இந்த வைரஸ் மூளையின் செல்களை எவ்வாறு பாதிக்கிறது, அவற்றை எவ்வாறு மாற்றுகிறது என்பது இன்னும் ஆராயப்படவில்லை.

ஐஐடி இந்தூரைச் சேர்ந்த ஒரு ஆராய்ச்சிக் குழு, புற்றுநோயை உண்டாக்கும் இந்த வைரஸின் தாக்கத்தின் சாத்தியங்கள் மூளை செல்களில் எவ்வாறு இருக்கும் என்பதை ஆராய ராமன் மைக்ரோஸ் பெக்ட்ரோஸ்கோபி டெக்னிக் எனும் நுண் நிறமாலையியல் நுட்பத்தைப் பயன்படுத்தியது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நிதியின் கீழ் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது..

Also Read: வரும் 15-ம் தேதி வரை எல்லாம் உஷாரா இருங்க… 65 கி.மீ வேகத்தில் காற்றுடன் மழை பெய்யும்…! வானிலை மையம் எச்சரிக்கை…!

Vignesh

Next Post

ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 10 வயது சிறுவனை விழுங்கிய ராட்சத முதலை... அதிர்ச்சி சம்பவம்..

Tue Jul 12 , 2022
மத்திய பிரதேசத்தில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிறுவனை முதலை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. மத்திய பிரதேச மாநிலம் ஷியோபூரில் 10 வயது சிறுவனை முதலை விழுங்கியது. நேற்று காலை சம்பல் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிறுவனை முதலை தாக்கியுள்ளது. முதலை சிறுவனை ஆற்றில் இழுத்துச் சென்றது. சம்பவ இடத்தில் இருந்த அப்பகுதி மக்கள் உடனடியாக அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.. மேலும் குச்சிகள், கயிறு […]

You May Like