சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..! கள்ள உறவை காட்டி கொடுத்த கேமரா..! காவலர்கள் பற்றி காவல்நிலையத்தில் புகார்..! 2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..!

அமித்ஷா மீது தடை விதிக்க பரிசீலனை : குடியுரிமை சட்டதிருத்தம் குறித்து அமெரிக்கா எச்சரிக்கை..

குடியுரிமை சட்டதிருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்த மசோதாவிற்கு சர்வதேச மதச் சுதந்திரத்திற்கான அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


குடியுரிமை சட்ட திருத்த மசோதா (Citizenship Amendment Bill) எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் நள்ளிரவு நிறைவேற்றப்பட்டது. 12 மணி நேர காரசார விவாதத்திற்கு பிறகு நள்ளிரவு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 311 எம்.பிக்கள் இந்த மசோதாவிற்கு ஆதரவாகவும், 80 பேர் எதிராகவும் வாக்களித்தனர். பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இந்து, பார்சி, சீக்கியம், புத்த மதம், ஜெயின், கிறிஸ்துவம் ஆகிய மதங்களை சார்ந்து மத துன்புறுத்தலுக்கு ஆளாகி இந்தியாவிற்கு மக்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்க வழிவகை செய்யும் வகையில் இந்த மசோதாவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. முஸ்லீம் அல்லாத மதத்தினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் இந்த மசோதாவிற்கு காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

owaisi 1

இந்நிலையில் யூ.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் (USCIRF – US Commission for International Religious Freedom) எனப்படும் சர்வதேச மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்க கமிஷன், குடியுரிமை சட்டதிருத்த மசோதா தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது. மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கொண்டுவந்த குடியுரிமை சட்டதிருத்த மசோதா மிகுந்த கவலையளிப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டால், அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் மீது தடை விதிக்க அமெரிக்கா பரிசீலனை செய்யும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. தவறான வழியில் செல்லும் இந்த மசோதா ஆபத்தான திருப்பத்தை ஏற்படுத்தும் எனவும், இந்தியாவின் பன்முகத் தன்மை மற்றும் இந்திய அரசியலமைப்பின் சமூக நீதி கொள்கைக்கு எதிராக இந்த சட்ட திருத்தம் உள்ளதாகவும் யூ.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் லட்சக்கணக்கான முஸ்லீம் மக்களிடம் இருந்து இந்திய குடியுரிமையை பறிக்கும் ஒரு மத ரீதியிலான சோதனையை இந்தியா உருவாக்குகிறது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

1newsnationuser1

Next Post

38 பேருடன் புறப்பட்ட சிலி நாட்டின் ராணுவ விமானம் நடு வானில் மாயம்..

Tue Dec 10 , 2019
சிலி நாட்டிலிருந்து 38 பேருடன் புறப்பட்ட ராணுவ விமானம் மாயமானதாக அந்நாட்டு விமானப்படை தெரிவித்துள்ளது. சிலி நாட்டின் தெற்கு நகமான அரேனஸ் என்ற இடத்திலிருந்து அண்டார்டிகாவில் உள்ள விமானப்படை தளத்திற்கு நேற்று மாலை 4.55 மணிக்கு ஹெர்குலெஸ் சி 130 ரக விமானம் புறப்பட்டது. ஆனால் மாலை 6 மணிக்கு பிறகு அந்த விமானத்துடனான தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக சிலி விமானப் படை தெரிவித்துள்ளது. விமானம் மாயமானதை தொடர்ந்து, தேடுதல் […]
விமானங்களில்

You May Like