தொடரும் கனமழை.. இந்த மாவட்டத்தில் இன்று ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை..

கனமழை தொடர்வதால் இன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர் போன்ற மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.. இந்த நிலையில் தமிழகத்தில் பரவலாக வரும் 16-ம் தேதி வரை மிதமான மழை தொடரும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது..

இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் நேற்றிரவு முதல் இடைவிடாத கனமழை பெய்து வருகிறது.. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.. நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி கூடலூர், பந்தலூர், உதகை, குந்தா ஆகிய 4 தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

10 மற்றும்‌ 12-ம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம் என அறிவிப்பு...!

Wed Jul 13 , 2022
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: பத்தாம்‌ வகுப்பு மற்றும்‌ பன்னிரெண்டாம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண்‌ சான்று வழங்கப்படும்‌ பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி நடைபெறும் முறை கைவிடப்பட்டு, ஆன்லைனில்‌ பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள்ப்பட்டுள்ளது. எனவே பத்தாம்‌ வகுப்பு மற்றும்‌ பன்னிரெண்டாம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்ற […]

You May Like