ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு..! பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அருவிகளில் குளிக்கவும் பரிசல்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாகக் காவிரி ஆறு கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்குள் நுழைகிறது. இங்கு, ஐந்தருவி, சினி அருவி, மெயின் அருவி ஆகியவை உள்ளன. தண்ணீர் பாய்ந்தோடும் காலங்களில் பரிசல்களில் சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்து மகிழ்வார்கள். மேலும், முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்டவற்றைக் காண, சீசன் காலங்களில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு; மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு | Dinamalar  Tamil News

இந்நிலையில், ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி 60,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி 85,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது நீர்வரத்து 1,05,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளுக்குப் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கலில் ஆற்றில் குளிக்க, பரிசல் பயணம் செய்ய தடை  | water flow increase: Ban for bathing and boat sailing on hogenakkal -  hindutamil.in

மேலும், ஆற்றில் இறங்கிக் குளிக்கவோ, அருவியில் இறங்கிக் குளிக்கவோ, ஆற்றைக் கடக்கவோ, ஆற்றின் குறுக்கே கால்நடைகளை அழைத்துச் செல்லவோ மற்றும் படகுகளை இயக்கவோ, படகு சவாரி செய்யவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

ஓபிஎஸ் மகன் மீது ஏன் நடவடிக்கை இல்லை..? எடப்பாடி தரப்பு பதிலளிக்குமா..? முரசொலி கேள்வி

Tue Jul 12 , 2022
ரவீந்திரநாத் எம்.பி மீது ஏன் நடவடிக்கை இல்லை என திமுக நாளேடான முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது. திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில், “திமுக ஒரு தீயசக்தி… அதை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவதற்காக எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கினார். அந்த திமுக-வை ஓ.பன்னீர்செல்வம் புகழ்ந்து பேசுகிறார். அவருடைய மகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துவிட்டு வந்து, அவரது செயல்பாடுகளின் சிறப்பைப் பற்றிப் பேசுகிறார். இவை எல்லாம் கட்சி விரோத நடவடிக்கைகள்’ எனக் கூறி அதிமுகவில் […]

You May Like