சர்ச்சை..!! ஊழியரை செருப்பு சுமக்க வைத்த அமைச்சர் ரோஜா..!! வலுக்கும் கண்டனங்கள்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. இவர் தென்னிந்திய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். நடிகை ரோஜா தற்போது ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். இந்நிலையில், அமைச்சர் ரோஜா ஆந்திராவில் உள்ள பாபட்லா சூரிய லங்கா சென்றுள்ளார். அவர் அங்கு செருப்பை கழட்டி விட்டு கடலில் கால்களை நனைத்து மகிழ்ச்சியோடு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ரோஜாவின் ஊழியர் ஒருவர் அவரின் செருப்பை கையில் எடுத்து வைத்துள்ளார்.

அமைச்சர் ரோஜாவின் செருப்பை ஊழியர் ஒருவர் கையில் வைத்திருந்தது ஊடகங்களில் வெளியான நிலையில், தற்போது ரோஜாவுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. ஆனால் ஊழியர் அமைச்சர் ரோஜா என்னிடம் செருப்பை தரவில்லை எனவும், கடல் அலையில் அடித்துச் சென்று விடக்கூடாது என்பதற்காக தானே கையில் எடுத்து வைத்திருந்தேன் என்றும் கூறியுள்ளார். மேலும், சில ஊடகங்கள் தான் இந்த விஷயத்தை ஊதி பெரிதாகி விட்டது என்றும் அந்த ஊழியர் வேதனை தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

500 கோல்கள்..!! அதிரடி காட்டிய கிறிஸ்டியானா ரொனால்டோ..!! புதிய சாதனை..!!

Fri Feb 10 , 2023
கிளப் போட்டிகளில் மொத்தமாக 500 கோல்களுக்கு மேல் அடித்து ரொனால்டோ சாதனை படைத்துள்ளார். சவூதி ப்ரோ லீக் போட்டியில் அல் நாசர் அணிக்காக ரொனால்டோ தற்போது விளையாடி வருகிறார். நேற்றைய போட்டியில் அல் நாசர் மற்றும் அல் வெஹ்தா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ரொனால்டோ 4 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் 21-வது நிமிடத்தில் ரொனால்டோ அடித்த முதல் கோலே அவருக்கு ஒரு மைல்கல்லாக அமைந்தது. அதன் […]

You May Like