2 பந்துகளில் 27 ரன்கள் அடித்த ஆர்ச்சர்…. 9 சிக்ஸர்கள் அடித்த சஞ்சு சாம்சன்…. மாஸ் காட்டியா ராஜஸ்தான்… அம்பத்தி ராயுடு விலகல்…தோனி கூறிய காரணம்! ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 217 ரன்கள் இலக்கு! 4வது லீக் ஆட்டம்….காயம் காரணமாக அம்பத்தி ராயுடு விலகல்! 4வது லீக் ஆட்டம்…சென்னை அணி பந்துவீச்சு தேர்வு! ரெய்னா, தினேஷ் கார்த்திக் சாதனைகளை முறியடிப்பாரா தல தோனி? சர்ச்சையில் சிக்கிய பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல்..! ஏற்கனவே வாய்க்கா தகராறு.. இப்போ இது வேறயா?.. கொஞ்சமா நெஞ்சாமா… குடித்துவிட்டு இன்ஸ்பெக்டர் செய்யும் அராஜகம்! குட்நியூஸ்..!! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. Record Break..!! சிஎஸ்கே vs மும்பை இடையிலான முதல் ஐபிஎல் போட்டியை எத்தனை கோடி பேர் பார்த்தனர் தெரியுமா..? நான் அப்படி என்ன சொல்லிட்டேன்னு அவரு என் மேல கோவமா இருக்காரு?.. அதிமுக எம்பி காட்டம்..! குடும்ப உறுப்பினர்களால் அதிகளவில் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர்…பாக்., நாடாளுமன்ற உறுப்பினர் பரபரப்பு பேச்சு! கொரோனாவை விட கடுமையான புதிய பாக்டீரியா தொற்று.. சீனாவில் பரவுவதால் இந்தியாவிற்கு என்ன ஆபத்து..? திருமணம் ஆனதை மறைத்து வேறொரு திருமணம் செய்பவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா?… முதல்வர் இல்லாத நேரத்தில் கெத்து காட்டிய ஓபிஎஸ்..! கட்சி அலுவலகத்தில் அவசர ஆலோசனை நடத்தியது இதற்குதான்..!

போலீசாரை அதிகம் தாக்கும் கொரோனா; வேலூரில் அனைத்து காவல் நிலையங்களும் மூடல்- எஸ்.பி உத்தரவு

போலீசாரை அதிகம் தாக்கும் கொரோனா; வேலூரில் அனைத்து காவல் நிலையங்களும் மூடல்- எஸ்.பி உத்தரவு

வேலூர்: வேலூரில் ஒரு உதவி ஆய்வாளர் உட்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், இரண்டு நாட்களுக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களையும் மூடுவதற்கு எஸ்.பி பிரவேஷ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை வேலூர் வடக்கு மற்றும் பாகாயம் காவல் நிலையத்தில் பணியாற்றும் ஒரு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 6 காவலர்கள் மற்றும் காவலர் குடியிருப்பில் வசிக்கும் 2 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எனவே வரும் நாட்களில் காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்றுப்பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள 23 சட்டம் – ஒழுங்கு காவல் நிலையங்கள், 2 மகளிர் காவல் நிலையங்கள், 4 போக்குவரத்துக் காவல் பிரிவு, 2 கலால் பிரிவுகளில் கிருமிநாசினி தெளித்து இரண்டு நாட்கள் மூடி வைக்கவும் எஸ்.பி. பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

போலீசாரை அதிகம் தாக்கும் கொரோனா; வேலூரில் அனைத்து காவல் நிலையங்களும் மூடல்- எஸ்.பி உத்தரவு

மேலும் இந்த இரண்டு நாட்கள் காவல்நிலையங்கள் மூடப்பட்டிருந்தாலும், காவல் நிலையத்துக்கு புகார் மனுக்கள் அளிக்க வரும் பொதுமக்களளின் வசதிக்காக காவல் நிலையத்தின் வெளிப்பகுதியில் புகார் மனுக்களைப் பெட்டியில் செலுத்துவதற்கான ஏற்பாட்டினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்கொண்டுள்ளார். காவலர்களுக்கு கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கும் வகையிலும், காவல்நிலையங்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடம் என்பதால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

போலீசாரை அதிகம் தாக்கும் கொரோனா; வேலூரில் அனைத்து காவல் நிலையங்களும் மூடல்- எஸ்.பி உத்தரவு

மேலும் இரண்டு நாட்கள் காவல்நிலையங்களில் மனுக்களை பெறுவதற்கு, ஒவ்வொரு காவல்நிலையத்திலும் ஒரு காவலரைப் பணியில் அமர்த்தி மனுக்களை பெட்டியில் செலுத்தவும், விசாரணை நடத்துவதற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இனி வரும் நாட்களில் தினமும் அனைத்து காவல்நிலையங்களிலும் மருந்து தெளிக்கும் பணிகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

1newsnationuser2

Next Post

இந்தியவிலேயே கண்டறியப்பட்ட கொரோனா மருந்து: மத்திய அரசு அனுமதி

Sun Jun 21 , 2020
லேசான மற்றும் மிதமான கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஃபாவிபிராவிர் எனும் நோய் எதிர்ப்பு மருந்தை, மும்பையைச் சேர்ந்த க்ளென்மார்க் பார்மாசூட்டிகல்ஸ் அறிமுகப்படுத்தி உள்ளது. ஒரு மாத்திரையின் விலை 103 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த மருந்திற்கான, உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தலுக்கான ஒப்புதலை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் வழங்கியுள்ளது. கொரோனா சிகிச்சை முறையில் ஊசி அல்லது வாய்வழியாக எடுத்துக்கொள்ள அங்கீகரிக்கப்பட்ட, முதல் மருந்து ஃபாவிபிராவிர் தான் என அந்நிறுவனத்தின் அறிக்கையில் […]
image 9

You May Like