அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

டெல்லி நிகழ்ச்சியில் பங்கேற்ற சகோதரர்களுக்கு கொரோனா உறுதி…

டெல்லி நிகழ்ச்சியில் பங்கேற்ற எண்ணூரைச் சேர்ந்த சகோதரர்களான அண்ணன்-தம்பி இருவருக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதையடுத்து இருவரும் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

coronavirus

கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவை பிறப்பித்ததையடுத்து, வீட்டை விட்டு வெளியே வராமலும், கொரோனா அறிகுறி தென்பட்டால் வீட்டிலேயே தனிமைப்டுத்தி கொள்ளுமாறு அரசு கேட்டு கொண்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த பலருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

மேலும் பலரை சுகாதாரத்துறை தீவிரமாக தேடி வருகிறது. இதையடுத்து, எண்ணூர் பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் சகோதரர்களான அண்ணன்-தம்பி ஆகிய இருவரும் டெல்லி நிகழ்ச்சியில் பங்கேற்றதாக வந்த தகவலையடுத்து, மாதவரம் போலீஸ் துணை கமிஷனர் ரவாளிப்பிரியா, சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல உதவி கமிஷனர் பால் தங்கதுரை உள்ளிட்ட அதிகாரிகள் அவர்களின் வீட்டுக்கு சென்று இருவரையும் பரிசோதனை செய்தனர்.

corona n

பரிசோதனையில் அண்ணன்-தம்பி இருவருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது உறுதியானது. உடனடியாக 2 பேரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அவர்களது குடும்பத்தினரும் வீட்டுக்குள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களது வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

அத்துடன் அந்த பகுதிக்கு வெளிநபர்கள் செல்லாமல் இருக்க அந்த பகுதிக்கு செல்லும் 5 வழிகளையும் அடைத்து அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், டெல்லி நிகழ்ச்சியில் பங்கேற்றதாக மதுராந்தகத்தில் 6 பேரும், செய்யூரில் 3 பேரும் அடையாளம் காணப்பட்டனர். அதில் 4 பேர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தனிவார்டில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

corona nettisangal

மற்றவர்கள் அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களது வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதன்பின், அவர்களது வீடு அமைந்துள்ள பகுதிகளைச் சுற்றிலும் வெளிநபர்கள் உள்ளே நுழையாதபடியும், அங்குள்ளவர்கள் வெளியே செல்லாத வகையிலும் தடுப்புகள் அமைத்து சீல் வைக்கப்பட்டது. இந்த பகுதிகளில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் நேரில் ஆய்வு செய்தார்.

மேலும், சுகாதார பணியாளர்களை கொண்டு அந்த பகுதிகளில் அடிக்கடி கிருமிநாசினி தெளிக்கவும், வெளிநபர்கள் யாரும் அந்த பகுதிக்குள் நுழையாமல் போலீசார் கண்காணிக்கவும் உத்தரவிட்டார். அவருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி பிரியா, மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதேபோல் டெல்லி நிகழ்ச்சியில் பங்கேற்ற திருவள்ளூரைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரது வீடு அமைந்துள்ள பகுதியில் நகராட்சி சுகாதார அதிகாரிகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் கிருமிநாசினியை வீடு, வீடாக தெளித்து பொதுமக்களிடம் வீடுகளை விட்டு வெளியே வராமல் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அறிவுரைகளை கூறி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.

1newsnationuser2

Next Post

கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் கிராமிய நாட்டுப்புறப்பாடல்...

Sat Apr 4 , 2020
கடலூர் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிராமிய நாட்டுப்புற கலைஞர்கள் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு பாடல்களை பாடினர். கடலூர் மாவட்டம், சிதம்பரம் காவல் துறை சார்பாக டி.எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை எடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிராமிய நாட்டுப்புற கலைஞர்களை அழைத்துவந்து பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சிதம்பரம் பேருந்து நிலையத்தில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க […]
Corona Awareness Folk Song ...

You May Like