வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

வீடியோ செய்தியை வெளியிட்டார் பிரதமர் மோடி… வீட்டில் இருக்கும் அனைவரும் இறைவனின் வடிவம்…

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக நாட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்றியும், செல்போன் டார்ச்சை ஒளிரவிட வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுகொண்டார்.

modiii

இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாகப் பரவி வரும் நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியில் நடமாட வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து இருமுறை நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.

இந்நிலையில், இன்று நாட்டு மக்களுக்கு வீடியோ செய்தி ஒன்றை வெளியிடுவதாக கூறியதையடுத்து இன்று 9மணிக்கு வீடியோவை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது, மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள், ஊரடங்கை மதித்து நடக்கும் நாட்டு மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும், நாம் எடுக்கும் நடவடிக்கைகளை உலக நாடுகள் பின்பற்றி வருவதாகவும், இந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறதாகவும் கூறியிருந்தார்.

நாடே ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராக போராடும் என்பதை மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர் வீட்டில் இருந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். நாம் தனி ஆட்கள் இல்லை 130 கோடி மக்களுடன் இணைந்துள்ளோம் நெருக்கடியான நேரத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்தது பாராட்டத்தக்கது என்று கூறினார். மேலும், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒளிமயமான காலத்தை கொண்டு வர வேண்டும். கொரோனா வைரசை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வை நோக்கி நாம் செல்ல வேண்டும் வீட்டில் இருக்கும் அனைவரும் இறைவனின் வடிவம் என கூறி முடித்தார்.

1newsnationuser2

Next Post

“5-ம் தேதி இரவு 9 மணி.. 9 நிமிடம்..” கைத்தட்டலை தொடர்ந்து மின்விளக்கை அணைக்க மக்களிடம் மோடி வேண்டுகோள்..

Fri Apr 3 , 2020
வரும் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு, 9 நிமிடம் அனைவரும் மின்விளக்கை அணைத்து மெழுகுவர்த்தி அல்லது டார்ச் லைட் மூலம் ஒளியேற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடி இன்று காலை வீடியோ மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் வரும் 5-ம் தேதி இரவு 9 மணியளவில் அனைவரும் 9 நிமிடம் தங்கள் வீடுகளில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டு, மெழுகுவர்த்தி […]
modi

You May Like