கொரோனா பாதிப்பில் 1 லட்சத்தை கடந்த முதல் இந்திய மாநிலமாக மகாராஷ்டிரா மாறியுள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தற்போது நாடு முழுவதும் 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் இம்முறை பல்வேறு தளர்வுகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்தாலும் கூட நோய்த் தொற்று குறைந்த பாடில்லை. இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினமும் சராசரியாக 9,000-க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் தற்போது உலகளவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இந்தியா 4-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 3,493 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால், அம்மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. இதுவரை அம்மாநிலத்தில் 1,01,141 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 127 பேர் உயிரிழந்தத்தால் கொரோனா பலி எண்ணிக்கை 3,717-ஆக அதிகரித்துள்ளது. எனினும் 1,718 பேர் மருத்துமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதால், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 47,796-ஆக அதிகரித்துள்ளது.

அம்மாநில தலைநகரான மும்பையில் இன்று மட்டும் 1,3666 புதிய கொரோனா பாதிப்புகளும், 90 புதிய உயிரிழப்புகளும் பதிவாகி உள்ளன. இதன் காரணமாக தற்போது மும்பையில், 55,451 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பலி எண்ணிக்கை 2,041-ஆக அதிகரித்துள்ளது.