பூஜ்ஜிய எண்ணிக்கையில் இருந்த கொரோனா தற்போது அதிகரித்து வருவதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் பல அதிரடி திட்டங்களை செயல்படுத்தி கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வருகிறது.

கொரோனா பரவல் ஆரம்பத்தில் கோவையில் ஒரு ஆட்டத்தை காண்பித்தது. பின்பு அரசு மற்றும் மக்கள் தொடர் முயற்சியால் கொரோனா தொற்று இல்லாத பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டது. பூஜ்ஜியத்தை கொண்டு பல மாவட்டங்களுக்கும் முன் உதாரணமாக இருந்தது.
தற்போது ஆறு மாவட்டங்கள் முழு ஊரடங்கில் இருக்கும் வேளையில் மற்ற மாவட்டங்களிலும் பரவல் வெகுவாக அதிகரித்துள்ளது. கோவையில் ஒரே நாளில் 21 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சுதாரித்த மாவட்ட நிர்வாகம் பல அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அதில் முககவசம், இ-பாஸ் இல்லாமல் ஊருக்குள் நுழைபவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திரும்பி அனுப்பபடுகின்றனர். சென்னை போன்ற நகரங்களில் இருந்து தொழிலாளர்களை முறையான அனுமதி இன்றி அழைத்து வந்த நகைக்கடை போன்றவை சீல் வைக்கப்பட்டுள்ளது.
தனிமனித இடைவெளி இன்றி செயல்படும் பேருந்துகள் நிறுத்தப்படுகின்றனர். மாவட்ட எல்லையில் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா எண்ணிகையை மீண்டும் பூஜ்ஜியம் கொண்டுவருவதே இவர்களின் நோக்கமாக துடிப்புடன் செயல்படுகின்றனர். நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் மக்கள் மத்தியில் பதற்றம் இருந்தாலும் நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது.