
கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் திமுக எம்எல்ஏ கார்த்திக்கேயன் குடும்பத்தை சேர்ந்த இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம்தொகுதி எம்எல்ஏ கார்த்திக்கேயனின் மனைவி இளமதி மற்றும் அவரது 8 வயது மகள் மகன்யா ஆகிய இருவருக்கும் சோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் இருவரும் பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இவர்கள் இருவருடன் தொடர்பில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் ஏழு பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது அனைவரிடத்திலும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.