
கொல்கத்தா: மேற்குவங்கத்தில் இறந்து போன சடலங்களை தகனம் செய்வதற்காக கயிற்றினை கட்டி இழுந்து செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடலை புதுச்சேரியில் குழிக்குள் தள்ளியது, டெல்லியில் குப்பைத்தொட்டியில் வீசியது போல மேற்குவங்கத்திலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேற்கு வங்கத்தில் தெற்கு கொல்கத்தாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துப்போன 13 சடலங்கள் தகனத்துக்காக, எடுத்துச் செல்லப்படும் போது கயிற்றினை கட்டி தரதரவென இழுத்து சென்று அமரர் ஊர்தியில் ஏற்றிய வீடியோ ஒன்று வெளியாகியிருப்பது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக பேசிய கவர்னர் ஜகதீப் தங்கர், இறந்து போனவர்களின் சடலங்களை இதுபோன்று இழிவாக நடத்தியது மனிகுலத்தை வெட்கப்படச் செய்துள்ளது என்றும்,கொரோனா நோயாளிகளாக இருந்தாலும் இச்செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து கவர்னரின் கருத்திற்கு பதிலளித்த மேற்கு வங்க சுகாதாரத்துறை,இந்த உடல்கள் கொரோனா நோயாளிகளுடையது இல்லை என்றும் மருத்துவமனை பிணவறையில் அடையாளம் காணப்படாத உடல்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.மேலும் இதுபோன்ற போலிச் செய்திகளை பரப்புவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கொல்கத்தா காவல்துறை ட்வீட் செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உள்ளிட்ட எந்தவகை நோயினால் உயிரிழந்தாலும் அவர்களது உடல்களை அவமரியாதை செய்வது போல் நடந்து கொள்வது கண்டித்தக்க செயல் சமூக ஆர்வலர்கள் கொந்தளிக்கின்றனர்.