"தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..! முதலிரவின் போது பயத்தில் புதுமண தம்பதிகள் ஓட்டம்..! பழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் எங்களுக்கு கொடுக்க வேண்டும்..! அண்ணாமலை டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது புது ரூல்ஸ்..! வங்கி சேவை முதல் சிலிண்டர் வரை..! உருவானது 'நிவர்' புயல்..! மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்..! வடகொரியாவில் அடுத்தடுத்து நிகழும் மர்மம்…! அதிபரின் சகோதரர் மகனை காணவில்லை..! உச்சக்கட்ட பரபரப்பு..! நவம்பர் 29 காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து..! 2020ன் மற்றொரு மோசமான சம்பவம்..! இந்த 4 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யக்கூடும்… வானிலை ஆய்வு மையம்..

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியில் கொரனாவால் ஒருவர் பலி

mumbai dharavi

 

மும்பை தாராவியை சேர்ந்தவர் கொரோனா பாதிப்பால் பலி- குடிசைப்பகுதி மக்கள் அச்சம்


ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதிகளில் ஒன்றான மகாராஷ்டிரா மாநிலம் மும்பை தாராவி பகுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். 56-வயதான அந்த நபருக்கு நேற்று மும்பை சியோன் மருத்துவமனையில் பரிசோதனை நடத்திய போது கொரானா தொற்று உறுதியானது. இதையடுத்து, தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுநீரகம் செயல் இழப்பு ஏற்பட்டு இறந்தார். இவர் வெளிநாடு எதுவும் செல்லவில்லை எனக்கூறப்படுகிறது.

அப்பகுதியில், 5 சதுர கி.மீட்டர் பரப்பில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள் என்பதால் மிகவும் மக்கள் அடர்த்தி நிறைந்த பகுதியாக தாராவி விளங்குகிறது. இந்நிலையில், கொரோனாவால் ஒருவர் அங்கு உயிரிழந்து இருப்பது அப்பகுதி வாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த நபர் வசித்து வந்த குடியிருப்பு முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்டிடத்தில் வசிப்பர்கள் அனைவரும் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளனர். அந்த குடியிருப்பில் இருப்பவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, நாட்டில் கொரோனா வைரஸ் அதிகம் பரவும் மைய இடங்களில் ஒன்றாக மும்பை விளங்குகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மும்பையில் மட்டும் 59 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மராட்டியத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 330-ஐ கடந்துள்ளது.

1newsnationuser4

Next Post

இலங்கையில் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்..

Thu Apr 2 , 2020
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக கப்பலில் கடத்தப்பட்ட ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், போதைப் பொருட்களின் புழக்கமும், பயன்பாடும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. போர் காலத்தில் இலங்கைப் படையினரும், விடுதலைப் புலிகளும் தரையிலும் ,கடலிலும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள். அதனால், போதைப் பொருட்களை கடத்துவதும், இடம் மாற்றுவதும் என்பது கடினமானதாக இருந்தது. ஆனால், போருக்கு பின்னர் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் […]
images 3

You May Like