பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..?

கொரோனா தாக்கம் : ஹோட்டல்கள், ரெஸ்டாரண்டகள் அக்டோபர் 15-ம் தேதி வரை மூடல்..? உண்மை என்ன..?

கொரோனா வைரஸ் காரணமாக ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்கள் அக்டோபர் 15-ம் தேதி வரை மூட சுற்றுலா துறை உத்தரவட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் இதுகுறித்து அரசு விளக்கமளித்துள்ளது.

hotels closed

கொரோனா பெருந்தொற்று ஒருபுறம் வேகமாக பரவிக் கொண்டிருந்தாலும், அதனைவிட வேகமாக அது தொடர்பான போலி செய்திகள், வதந்திகளும் மறுபுறம் பரவி வருகின்றன. அப்படி சமீப காலமாக பரவி வரும் வதந்தி குறித்து தான் நாம் தற்போது பார்க்கப் போகிறோம்.. ஆம். வரும் அக்டோபர் 15 வரை எந்த ஹோட்டல்களும், ரெஸ்ட்ராண்ட்களும் திறக்கப்படக்கூடாது என்று சுற்றுலா அமைச்சகம் உத்தரவிட்டதாக ஒரு தகவல் பரவியது. ஆனால் அது உண்மையல்ல..

hotel-fake-news

மத்திய அரசின் பிரசார் பாரதி செய்தி நிறுவனம் இந்த செய்தியை மறுத்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “ கொரோனா வைரஸ் காரணமாக வரும் அக்டோபர் 15-ம் தேதி வரை ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்ட்ராண்ட்கள் மூடப்பட்டிருக்கும் என்று வெளியான தகவல்கள் தவறானவை..

இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் வலம் வரும் செய்திகள் போலியானவை. சுற்றுலா அமைச்சகம் இதுதொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை..” என்று குறிப்பிட்டுள்ளது.

எனினும் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கமுடியாவிட்டால், ஹோட்டல்களை மூட வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் உணவு என்பது அடிப்படை தேவை என்பதால் எல்லா உணவகங்களும் உணவு விநியோகம் வழங்க அனுமதிக்கப்படுகின்றன.

இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5000-ஐ தாண்டியுள்ள நிலையில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த 25-ம் தேதி முதல் அமலில் உள்ள ஊரடங்கு வரும் 14-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. அதன்பிறகும் கூட, கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கூட, உடனடியாக மக்கள் ஹோட்டல்களுக்கு அதிகளவு வரமாட்டார்கள் என்றும், இந்த நிலை இயல்புக்கு வர காலம் அவகாசம் தேவை என்று ஹோட்டல் உரிமையாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவின் 50 பில்லியன் டாலர் மதிப்புடைய ஹோட்டல் நிறுவனம், கொரோனா காரணமாக இந்த ஆண்டு 9 பில்லியன் டாலர் இழப்பை சந்திக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் உள்ள மொத்த உணவகங்களில் 25 சதவீத ஹோட்டல்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்படும் என்று தேசிய ரெஸ்டாரண்ட் அசோசியேஷன் அமைப்பு தெரிவித்துள்ளது.

1newsnationuser1

Next Post

மனிதாபிமானத்தோடு செயல்படுகிறதா காவல்துறை ? இக்கட்டான சூழலிலும் ஹெல்மெட் அணியாமல் சென்றால் அபராதமா?

Thu Apr 9 , 2020
ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் மக்கள் வெளியே வரக்கூடிய ஏன் ஹெல்மெட் அணியவில்லை? எதற்கு இப்படி சுற்றிதிரிகிறீர்கள்? என கேள்விகள் கேட்டு அபராதம் விதிக்கின்றனர் ஒரு சில காவல்துறையினர். ஏன் தினமும் வழக்குப்பதிவு எவ்வளவு என்பதனை காண்பிக்க வேண்டியா? இல்லை அவர்களின் பதவியின் அதிகாரத்தினை காண்பிக்கிறார்களா? இருசக்கர வாகனத்தில் செல்வதால் ஏற்படும் விபத்தினை குறைக்கவே ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை மீறியும் செல்பவர்களை தான் காவல்துறையினர் வழக்குபதிவு […]
Helmet fine 1

You May Like