3 மாவட்ட குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி டாஸ்மாக் விடுமுறை மணிக்கு 155 கி.மீ வேகத்தில் புயல் காற்று.. பொதுமக்களுக்கு தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை.. இல்லத்தரசிகளே சிலிண்டரின் வாழ்நாள் ஆயுள் காலம் குறித்த பயம் இனி இல்லை #Breaking : நாளையும் இந்த 13 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை.. கனமழை தொடர்வதால் தமிழக அரசு அறிவிப்பு.. தீவிரப் புயலாக மாறிய நிவர்.. புயல் நகரும் வேகம் மணிக்கு 11 கி.மீ-ஆக அதிகரிப்பு.. மிக அபாயம்..! ஏற்றப்பட்டது 10ஆம் எண் கூண்டு..! நிவர் புயலினால் அதிக பாதிப்பு இந்த 2 மாவட்டங்களுக்கு தானாம்.. வானிலை வல்லுனர்கள் தகவல்.. உங்க வீட்டுல ரீஃபைண்ட் ஆயில்ல தான் சமைக்கிறீங்களா..? அப்போ கவனமா இருங்க..! சைரன் ஒலி எழுப்பி எச்சரித்து… திறக்கப்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி… இன்னும் நிவர் புயலே முடியல.. அதுக்குள்ளே அடுத்த புயலா..! நிவர் புயலுக்கு கவிஞர் வைரமுத்துவின் கடிதம் – போ புயலே போய்விடு – நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்..! என்ன காரணம்..? பேனர்கள் மற்றும் பெயர் பலகைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு விருதுக்கான பெயர் பட்டியலில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின்..! இன்னும் யார் யார் பெயர் இருக்கு தெரியுமா..? சென்னையில் வெள்ள அபாய எச்சரிக்கை… செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பின் எதிரொலி….

கடந்த 2 மாதங்களில் உலக கோடிஸ்வரர்களின் சொத்துமதிப்பை வீழ்ச்சியடைய செய்த கொரோனா…

முதன் முறையாக கொரோனாவால் 2 மாதங்களில் உலக கோடிஸ்வரர்களை கடுமையாக வீழ்ச்சியடைய செய்துள்ளது.

billionaire

இந்தியாவின் முதல் பணக்காரரான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு கடந்த 2 மாதங்களில் 28% வீழ்ச்சியடைந்துள்ளது. அதாவது, நாள் ஒன்றுக்கு ரூ.2280 கோடி வீதம் 2 மாதங்களுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 44400 கோடி குறைந்துள்ளது. தற்போது, அவரது நிகர சொத்து மதிப்பு ரூ.3 லட்சத்து 64 ஆயிரத்து 800 கோடியாக உள்ளது.

மேலும், உலக பணக்காரர்கள் வரிசையில், முகேஷ் அம்பானி 8 இடங்கள் கீழே இறங்கி, 17-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இதுபோல், இதர முன்னணி தொழிலதிபர்களின் சொத்து மதிப்பும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கவுதம் அதானியின் சொத்து மதிப்பு ரூ.45 ஆயிரத்து 600 கோடி குறைந்துள்ளது. இது, அவரது சொத்து மதிப்பில் 37% ஆகும். எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனர் சிவநாடாரின் சொத்து மதிப்பு ரூ.38 ஆயிரம் கோடி (26%) குறைந்துள்ளது. வங்கித் துறை ஜாம்பவான் உதய் கோடக் கின் சொத்து மதிப்பு ரூ.30 ஆயிரத்து 400 கோடி (28%) குறைந்துள்ளது. அதானி, சிவநாடார், உதய் கோடக் ஆகிய மூவரும் உலகின் முன்னணி 100 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேறி விட்டனர்.

முகேஷ் அம்பானிதான் அதில் நீடிக்கும் ஒரே இந்தியர் ஆவார். உலக அளவில் அதிகமாக நஷ்டம் அடைந்தவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆடை அலங்கார ஜாம்பவான் பெர்னார்டு அர்னால்ட் ஆவார். அவருக்கு ரூ.2 லட்சத்து 28 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு அடுத்தபடியாக முகேஷ் அம்பானிதான், உலகின் முன்னணி 10 பணக்காரர்கள் பட்டியலில் உள்ள பில்கேட்ஸ், ‘பேஸ்புக்’ நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் ஆகியோரின் சொத்து மதிப்பிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அமேசான் அதிபர் ஜெப் பெசோஸ், உலகின் முதல் பணக்காரராக தொடர்ந்து நீடிக்கிறார். ஆனால், அவரது சொத்துமதிப்பும் 9% வீழ்ச்சி அடைந்துள்ளது. அதே சமயத்தில், சீன தொழிலதிபர்கள் பலன் அடைந்துள்ளனர். உலகின் முன்னணி 100 பணக்காரர்கள் பட்டியலில், சீனாவை சேர்ந்த 6 பேர் புதிதாக இடம் பெற்றுள்ளனர்.

1newsnationuser2

Next Post

கொரோனாவும் மோடியின் அறிவிப்புகளும்.. ஏழை, எளிய மக்கள் நலனில் அலட்சியம் காட்டுகிறதா மத்திய அரசு..?

Tue Apr 7 , 2020
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய அரசு ஏழை, எளிய மக்கள் நலனில் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொரோனா இந்தியாவில் பரவியது முதல் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்புகளும், மோடி மக்களிடையே ஆற்றிய உரைகளும் எதை வெளிப்படுத்துகின்றன..? உண்மையில் கொரோனாவின் ஆபத்தை தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லையா..? விரிவாக பார்க்கலாம்.. கொரோனா என்னும் அரக்கனின் பிடியில் பெரும்பாலான உலக நாடுகள் சிக்கி தவித்து வருகின்றன. இந்த […]
Modi new

You May Like