இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் 2020 தன் மனைவி தன் வீட்டின் முன் வேறொரு ஆணுடன் பேசிக்கொண்டிருந்ததால் விபரீதம் – துப்பாக்கியால் சுட்ட போலிஸ். உயிரோடு இருந்தவருக்கு பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்த மருத்துவமனை – சவக்கிடங்கு ஊழியர்கள் அதிர்ச்சி வீட்டை வாடகைக்கு விடுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை – வருகிறது புதிய சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் இடம்பிடித்த ஹைதராபாத்.. மற்ற மாநிலங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன..? உலகின் மோசமான ராணுவ ஆயுதத்தை உருவாக்கி வரும் சீனா.. வெளியான அதிர்ச்சி தகவல்.. OTT-ல் ரிலீசாகும் மாஸ்டர்.. எந்த நிறுவனம் படத்தை வாங்கியுள்ளது தெரியுமா..? சர்க்கரை நோயாளிகள் உங்கள் உணவில் இந்த ஒன்றை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள்..! தோல் நோய்களுக்கும் அருமருந்து..! மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..

இந்தியாவில் கொரோனா அபாயகரமான 3ம் கட்டத்தை எட்ட வாய்ப்பு அதிகம்..!

இந்தியாவில் கொரோனா அபாயகரமான 3ம் கட்டத்தை எட்ட வாய்ப்பு அதிகம்  உள்ளதாக நிதி ஆயோக்கின் சிறப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் எச்சரித்துள்ளார்.

corona virus 12

கொரானா வைரஸ் இந்தியாவில் இரண்டாம் நிலையை கடந்து, சமூக தொற்று எனப்படும் அபாயகரமான 3ம் கட்டத்தை அடுத்த 5 முதல் 10 நாட்களில் எட்டும் என நிதி ஆயோக்கின் சிறப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் எச்சரித்துள்ளார். இதனால், பல லட்சம் பேர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலின் அபாயகரமான கட்டம் என கணிக்கப்பட்டு இருப்பது 3ம் நிலை. இதில்தான், தற்போது ஒரு சில நூறு பேருக்கு மட்டுமே தொற்றிய இந்த வைரஸ், ஒரே நேரத்தில் பல ஆயிரம் பேர், லட்சம் பேருக்கு பரவக்கூடிய ‘சமூக தொற்று’ எனப்படும் மோசமான நிலையை எட்டும்.

தற்போது வரை கட்டுப்பாட்டில் உள்ள கொரானா, ஏற்கனவே தெரியாமல் சுற்றிக் கொண்டிருக்கும் கொரானா தொற்று உள்ளவர்களால், அடுத்த 10 நாட்களுக்குள் ஆபத்தான நிலையை எட்டும் என எச்சரிக்கிறார் கிரிதர் கியானி. இவர், சுகாதார ஆலோசகர்கள் அமைப்பின் நிறுவனராகவும், இந்திய தர மேலாண்மை கவுன்சலின் பொது செயலாளராகவும் இருக்கிறார். இவர் தற்போது கொரானாவை எதிர்த்து போராட நிதி ஆயோக்கின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

covid-19 corona


இவர் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில்: இந்தியாவில் என்ன வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கும் சூழல் நிலவுகிறது. கொரானா பரவலில் மூன்றாவது கட்டம் என்பது மிகவும் சிக்கலானது. இந்த மூன்றாவது நிலையில் நோய் தொற்று மிக வேகமாக பரவும். யாரிடம் இருந்து பரவத் தோன்றியது என்பதை கண்டறிவது மிகவும் கடினம். இந்தியா தற்போது 3வது நிலைக்கு செல்லவில்லை என்று கூறி வந்தாலும், சமூக பரவல் என்ற மூன்றாம் நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை. ஆனால், தற்போது எதையும் செய்து முடிக்க போதிய நேரமில்லை. இந்தியாவில் போதுமான பயிற்சி பெற்ற மருத்துவ பணியாளர்களோ அல்லது கோவிட்-19 சிகிச்சைக்கான மருத்துவமனைகளோ இல்லை.

இன்னும் 5 அல்லது 10 நாட்களில் கொரானா அறிகுறி இல்லாதவர்களுக்கு கூட அறிகுறி தென்பட வாய்ப்புள்ளது. இதனால், திடீரென நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக கூடும். தற்போது காய்ச்சல், இருமல், மூச்சு திணறல் உள்ளவர்களுக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது. ஏனெனில், பரிசோதனைக்கான மருத்துவ உபகரணங்கள் போதிய அளவில் இல்லை. மார்ச் 25ம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் 118 பரிசோதனை ஆய்வகங்களும், நாளொன்றுக்கு 15 ஆயிரம் நோயாளிகளை பரிசோதிக்கவும் மட்டுமே வசதி உள்ளது. இது தவிர 16 தனியார் மருத்துவமனை ஆய்வகங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

corona-virus-09

காய்ச்சல் அல்லது இருமலுடன் வருபவர்களுக்கு சோதனை செய்யப்படுவதில்லை. ஆனால், அவர்களுக்கும் கொரானா தொற்று இருக்க வாய்ப்புண்டு. எனவே, சோதனைக்கான போதிய மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட வேண்டும். நோயாளிகளை கண்டறிந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
அதே போல், கொரானா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளின் எண்ணிகையையும் அரசு அதிகரிக்க வேண்டும். குறிப்பாக, டெல்லி போன்ற பெருநகரங்களில் குறைந்தது 3 ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவமனை தயாராக இருக்க வேண்டும். இதற்கான மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க வேண்டும்.

Coronavirus 1


மேலும். சிறிய நகரங்களில் குறைந்தப்பட்சம் 600 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாவது சிகிச்சைக்கு தயாராக இருக்க வேண்டும். மருத்துவக் கல்லூரி விடுதி மாணவர்களை காலி செய்து விட்டு தனிமை வார்டாக மாற்றப்படுகிறது. ஆனால், இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு சான்றிதழ் அளித்து அவர்களுக்கு பயிற்சி அளித்தால் அவர்களையும் பணியில் ஈடுபடுத்தலாம். ஜனவரி 30ம் தேதி ஒன்றாக இருந்த கோவிட்-19 பாதிப்பு தற்போது 900 கடந்து விட்டது. பலியானவர்களின் எண்ணிகையும் 20 ஆக அதிகரித்துள்ளது. எனவே, கொரானாவைத் தடுக்க விரைந்து செயல்பட வேண்டிய சூழலில் இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1newsnationuser4

Next Post

சிறை கைதிகளுக்கு அடித்த ஜாக்பாட்..!

Sun Mar 29 , 2020
கொரோனா பீதி காரணமாக உத்தரபிரதேசத்தில் சிறையில் உள்ள, 11 ஆயிரம் கைதிகளை 8 வாரங்கள் ஜாமீன் மற்றும் பரோலில் விடுதலை செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த சமூக விலகலை மேம்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. பொதுஇடங்களுக்கு மக்கள் வர பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்ட்டுள்ளன. இந்நிலையில், ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள சிறைச்சாலைகளில் அதிக எண்ணிக்கையில் கைதிகள் இருப்பதால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. இதற்கிடையே, […]
170593

You May Like