சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..! பிக்பாஸ் சீசன் 4 எவிக்ஷன்: இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்..! கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாம்.! படிக்கும் இடத்தில் வயசு கோளாறு..! சக மாணவர்கள் முன்னிலையில் அரங்கேறிய அசிங்கம்..! பல ஆண்களுடன் தொடர்பு..! கத்தியால் குத்திய இரண்டாவது கணவன்..! காதலன் கணவனாகும் தருணத்தில் மரணம்..! அதிர்ச்சியில் காதலி செய்த காரியம்..! ஆய்வகத்தில் உருவாகும் செயற்கை கோழிக்கறி விற்பனை..! அனுமதி அளித்த முதல் நாடு..!

மருத்துவர்களுக்கு கொரானா: பொதுமக்களிடையே பீதி

கொரானாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் நோய்த்தொற்று பரவுவது, பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

doctors


இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் கொரானா வைராசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5, 200 கடந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 140-ஐ தாண்டியள்ளது.

தமிழகத்தில் பொறுத்தமட்டில் நேற்று புதியதாக 48 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 739 ஆக உயர்ந்துள்ளது. இதில், சென்னையில் 156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அடுத்தபடியாக கோவையில் 60 பேரும், திண்டுக்கலில் 46 பேரும், நெல்லையில் 40 பேரும், ஈரோட்டில் 32 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, நேற்று செய்தியாளர்களைக் சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், தமிழகத்தில் இதுவரை 4 மருத்துவர்களுக்கு கொரானா தொற்று உறுதியாகி உள்ளது என தெரிவித்தார்.

CMV 1 M
இந்தியாவில் கொரானா சமூக தொற்றாக மாறவில்லை எனக் கூறப்படும் நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் வைரஸ் பரவுவது கூடுதல் அச்சத்தை ஏற்படுத்துகிறது. வேறு பிரச்னைகளுடன் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கும், மருத்துவர்களிடமிருந்தே நோய் பரவ வாய்ப்பு இருப்பதால் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.

திருச்சியில் கொரானாவிற்கு சிகிச்சை அளிக்க, அரசின் அனுமதி பெற்றிருந்த தனியார் மருத்துவமனை ஊழியருக்கே நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு அந்த மருத்துவமனை தற்போது மூடப்பட்டுள்ளது. இதற்கிடையே, அந்த மருத்துவமனைக்கு வந்தவர்கள், சிகிச்சை பெற்றவர்களின் நிலை கேள்விக் குறியாகியுள்ளது.

இதேபோல் கேரளாவிலும் அரசு மருத்துவமனை மருத்துவருக்கே, நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைக்கு சீல் வைக்கபட்டுள்ளது.

இதனிடையே, ஆந்திராவிலும் இதே நிலை காணப்படுகிறது. அனந்தபூர் பகுதியில் கொரானா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த அரசு மருத்துவர் ஒருவருக்கும், அவருடன் பணியாற்றும் செவிலியர் இருவருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது மருத்துவமனை ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லுரைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் சமீபத்தில், சொந்த மருத்துவமனையை திறந்துள்ளார். இதற்காக பல மருத்துவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளார். இந்நிலையில் அவருக்கும் கொரானா தொற்று உறுதியாகியுள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி போன்ற நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் இதே நிலை தான் காணப்படுகிறது.

kerala corona

கொரானாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரகளுக்கே, நோய்த்தொற்று ஏற்பட்டு வருவது மக்களிடையே அச்சசத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களின் உயிர் காக்க போராடும் மருத்துவர்களுக்கு போதுமான மற்றும் தரமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாததே இதற்கு காரணம் என மருத்துவர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

1newsnationuser4

Next Post

கிரிக்கெட்: விஸ்டன் பட்டியலில் பெயரை இழந்த கோலி..!!

Thu Apr 9 , 2020
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி , 4 ஆண்டுகளுக்கப் பிறகு விஸ்டன் புத்தகத்தின் முன்னணி வீரர் என்ற அந்தஸ்தை இழந்துள்ளார்.   கிரிக்கெட் உலகின் புனித நூல் என்று கூறப்படும் விஸ்டன், 2020-ம் ஆண்டிற்கான சிறந்த வீரர்களின் பெயர்கள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டுள்ளது. இது விஸ்டனின் 157-வது பதிப்பாகும். இதில் இந்தாண்டிற்கான முன்னணி வீரர் என்ற பட்டத்தை, இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ஆன பென் ஸ்டாக்ஸ் தேர்வு […]
மூன்று மேட்ச்சில் சச்சின், தோனி, ரோஷித் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கோலி..! லிஸ்ட் ரெடியா இருக்கு..!

You May Like