நிவர் புயலினால் அதிக பாதிப்பு இந்த 2 மாவட்டங்களுக்கு தானாம்.. வானிலை வல்லுனர்கள் தகவல்.. உங்க வீட்டுல ரீஃபைண்ட் ஆயில்ல தான் சமைக்கிறீங்களா..? அப்போ கவனமா இருங்க..! சைரன் ஒலி எழுப்பி எச்சரித்து… திறக்கப்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி… இன்னும் நிவர் புயலே முடியல.. அதுக்குள்ளே அடுத்த புயலா..! நிவர் புயலுக்கு கவிஞர் வைரமுத்துவின் கடிதம் – போ புயலே போய்விடு – நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்..! என்ன காரணம்..? பேனர்கள் மற்றும் பெயர் பலகைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு விருதுக்கான பெயர் பட்டியலில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின்..! இன்னும் யார் யார் பெயர் இருக்கு தெரியுமா..? சென்னையில் வெள்ள அபாய எச்சரிக்கை… செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பின் எதிரொலி…. பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலோன் மஸ்க்..! உலக பணக்காரர்களில் இரண்டாவது இடம்..! 'ஒருவரின் முகத்தை அடித்து நொறுக்க செல்கிறேன்' ஊரடங்கை மீறி வெளியே சென்ற நபர்..! மனைவியின் நிர்வாண படத்தை ரூ.300க்கு விற்பனை செய்த கணவன்..! வரதட்சணை கொடுக்காததால், மனைவிக்கு நேர்ந்த கொடுமை..! கள்ளக்காதலுக்கு எதிரி..! ஏரியில் மிதந்த பெண்ணின் சடலம்..! பிஎம்டபிள்யூ சொகுசு காரை குப்பை வண்டியாக மாற்றிய உரிமையாளர்..! காரணம் இதுதானாம்..! வீடியோ உள்ளே..! 'நிவர்' புயல் தயார்..! உங்கள் வீட்டில் இவையெல்லாம் தயாரா..?

கொரோனா ஊரடங்கு.. மகனை மீட்க 1,400 கி.மீ ஸ்கூட்டியில் பயணம் செய்த தாய்.. நெகிழ்ச்சி சம்பவம்..

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள இந்த நேரத்தில், தெலங்கானாவை சேர்ந்த பெண் ஒருவர், நெல்லூரில் சிக்கியிருந்த தனது மகனை வீட்டுக்கு அழைத்துவர, கிட்டத்தட்ட 1,400 கி.மீ தூரம் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்துள்ளார். மகன் மீதான அன்பு, துணிச்சல், உறுதி ஆகியவை இந்த பயணத்தை சாத்தியமாக்கியுள்ளது. கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட தாயின் பாசப் போராட்டம் குறித்து விளக்குகிறது இந்தத் தொகுப்பு..

telangana woman

தெலங்கானாவை மாநிலம் ஹைதராபாத்திலிருந்து 200 கி.மீ தூரத்தில் உள்ள நிஜாமாபாத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார் ரஷியா பேகம். 15 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த இவர், தனது இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் அவரது இளைய மகன், நிஜாமுதீன் டந்த மார்ச் 12ம் தேதி, தனது நண்பருடன் அவரது ஊரான நெல்லூரில் உள்ள ரஹமாதாபாத்திற்குச் சென்று அங்கேயே தங்கியிருந்தார். இதனிடையே, கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கு விதமாக தொடர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் அவர் சொந்த ஊர் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.

corona-virus-lockdown_

வீட்டிற்கு திரும்ப முடியாமல், நெல்லூரில் சிக்கி தவிக்கும் தனது மகனை மீட்க வேண்டும் என்று நினைத்த ரஷியா பேகம், மகனை அழைத்துவர முடிவுசெய்தார். ஆனால் இளைய மகனை அழைத்து வர அவர் தனது மூத்த மகனை அனுப்பவில்லை. அவரை அனுப்பினால் தேவையில்லாமல் அவர் சுற்றித்திரிகிறார் என்று எண்ணி போலீசார் அவரை காவலில் வைக்கக்கூடும் என்று அஞ்சினார்.

எனவே தானே என்று மகனை அழைத்து வர வேண்டும் என்று விரும்பிய அவர், முதலில் ஒரு காரை எடுத்துச்செல்லலாம் என்று கருதினார். ஆனால் இறுதியில் தனது இரு சக்கர வாகனத்தின் மூலம் மகனை அழைத்து வரலாம் என்று முடிவு செய்தார்.

இதற்காக கடந்த திங்கள்கிழமை அன்று காலை உள்ளூர் காவல்துறையினரின் அனுமதியுடன் இந்த கடினமான பயணத்தை மேற்கொண்டார். கைதேர்ந்த வாகன ஓட்டிகளுக்கே சவாலாக இருக்கும் இந்த பயணத்தில், அவர் நெல்லூருக்கு தனியாகச் சென்று கடந்த புதன்கிழமை மாலை தனது இளைய மகனுடன் வீடு திரும்பியுள்ளார்.

இதுகுறித்து பேசிய ரஷியா “ஒரு சிறிய வாகனத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த பயணம் ஒரு பெண்ணுக்கு சவாலானது தான். ஆனால் என் மகனை மீண்டும் அழைத்து வரவேண்டும் என்ற எண்ணம், எனது எல்லா அச்சங்களையும் முறியடித்தது. நான் சில சப்பாதிகளை மட்டும் உணவாக எடுத்துச்சென்றேன். போக்குவரத்து மற்றும் ஆட்கள் இல்லாத சாலைகளில், இரவில் பயணிக்க சற்று அச்சமாகத்தான் இருந்தது” என்று தெரிவித்தார்.

telangana n

ஏப்ரல் 6ம் தேதி காலை, தனது பயணத்தைத் தொடங்கிய ரஷியா, மறுநாள் பிற்பகல் நெல்லூரை அடைந்தார். அங்கிருந்த மகனை அழைத்துக் கொண்டு அன்றைய தினமே, சொந்த ஊருக்குப் புறப்பட்டு புதன்கிழமை மாலை வீடு வந்து சேர்ந்ததாகவும் அவர் கூறினார்.

இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவியவுடன், நெட்டிசன்கள் பலரும் ரஷியா பேகமிற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மகன் மீதான ரஷியா கொண்ட அன்பு, உறுதி, தன்னம்பிக்கை குறித்து பலரும் அவரை வாழ்த்தி ட்வீட் செய்து வருகின்றனர்.

1newsnationuser1

Next Post

ரூ.500க்கு கொரோனாவை விரட்ட ஐஐடி உருவாக்கிய தொழில்நுட்பம்

Fri Apr 10 , 2020
உலகம் முழுவதும் கொரோனா பரவியிருக்கும் நிலையில், இந்த புதிய சாதனத்தை பஞ்சாபில் உள்ள ஐஐடி ரோபர் குழுவினர் உருவாக்கியுள்ளனர். தண்ணீரை சுத்தப்படுத்த பயன்படுத்தப்படும் அல்ட்ராவைலட் ஜெர்மிசிடல் எனப்படும் புற ஊதா கிருமி நாசினிகள் கதிர்வீச்சு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தை பயன்படுத்தி நாம் பயன்படுத்தும் பொருட்களில் கொரோனா கிருமி தொற்று இருந்தால் நீக்க முடியும். இந்த சாதனம் பொருட்களை சுத்தப்படுத்த 30 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது என ஐஐடி […]
IIT Rpoar

You May Like