அமலுக்கு வந்தது மத்திய அரசின் புதிய கோவிட் – 19 வழிகாட்டுதல்கள்.. எதற்கெல்லாம் அனுமதி.. எதற்கெல்லாம் தடை.. சசிகலா முன்கூட்டியே விடுதலையாக கூடாது.. தடை போடும் அதிமுக..? பின்னணி என்ன..? வயலில் வேலைபார்த்த 110 விவசாயிகள் கழுத்தை அறுத்து கொலை..! ஒரே இடத்தில் தகனம்..! ரூ.15,000 கோடி மதிப்பிலான முகேஷ் அம்பானியின் பங்களா..! 3 ஹெலிகாப்டர், மினி தியேட்டர், 600 ஊழியர்கள்.. இன்னும் பல..! வலுப்பெறும் புயல்.. அதிகனமழை கொட்ட போகும் 5 மாவட்டங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை.. காதலனை பிரிந்திருக்க முடியாமல் ரூ.32 கோடி செலவழித்த ஆலியா..! அப்படி என்ன செலவு பண்ணாரு..? RTGS பண பரிமாற்றத்தில் வந்தது நேரக் கட்டுப்பாடு..! முழு விவரங்கள் உள்ளே.. காதலிக்கு வேறு ஒருத்தன் அனுப்பிய குறுஞ்செய்தி..! அடுத்து நடந்த பயங்கரம்..! மின்கம்பி அறுந்து விழுந்து கைகளை பறிகொடுத்த பெண்..! வாயை திறக்காத மின்வாரியம்..! எப்போதும் போல ஒரே வார்த்தை தான்.. அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கிய மு.க அழகிரி.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. கள்ளத்தொடர்பை தட்டி கேட்ட மனைவி..! ஏட்டு மீது பாய்ந்த வழக்கு..! நாளை கரையை கடக்க உள்ள புரேவி புயல்.. 11 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக் செய்வது எப்படி..? இந்த நிறுவனத்தில் டிரைவர் முதல் பியூன் வரை எல்லோரும் கோடீஸ்வரர் தான்..! ஏன் தெரியுமா..?

கொரோனாவும் மோடியின் அறிவிப்புகளும்.. ஏழை, எளிய மக்கள் நலனில் அலட்சியம் காட்டுகிறதா மத்திய அரசு..?

Modi new

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய அரசு ஏழை, எளிய மக்கள் நலனில் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொரோனா இந்தியாவில் பரவியது முதல் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்புகளும், மோடி மக்களிடையே ஆற்றிய உரைகளும் எதை வெளிப்படுத்துகின்றன..? உண்மையில் கொரோனாவின் ஆபத்தை தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லையா..? விரிவாக பார்க்கலாம்..


கொரோனா என்னும் அரக்கனின் பிடியில் பெரும்பாலான உலக நாடுகள் சிக்கி தவித்து வருகின்றன. இந்த நோய் தொற்றில் இருந்து எப்படி விடுபடுவது என்று தெரியாமல், அமெரிக்க உள்ளிட்ட வல்லரசு நாடுகளே திணறி வருகின்றன. இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரஸ் காரணமாக சுமார் 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பலி எண்ணிக்கையோ 74,000-ஐ தாண்டியுள்ளது.

இப்படி உலகமே கொரோனா பீதியில் உள்ள நிலையில், இந்தியா மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன..? கடந்த ஒரே வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை எதிர்பாராத அளவு உயர்ந்து தற்போது 4400-ஐ தாண்டியுள்ளது. நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக 115 பேர் உயிரிழந்துள்ளனர்.

corona

கொரோனாவை பரவுதலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட மத்திய அரசு கடந்த மாதம் 24-ம் தேதி ஊரடங்கை அமல்படுத்தியது. மேலும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இதுஒருபுறமிருக்க, கொரோனா பாதிப்பு குறித்து இதுவரை 3 முறை நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றி உள்ளார். முதல் முறை பேசிய மோடி, Janatha Curfew எனப்படும் பொது ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதுமட்டுமின்றி சமூக விலகல், தனித்திருத்தல் என்ற முறையை பின்பற்ற வேண்டும் என்று கூறிய மோடி, கொரோனாவை எதிர்த்து போராடும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் பொதுமக்கள் கைதட்ட வேண்டும் என்று கூறினார்.

ஆனால் கைதட்டுவதற்காகவே கூட்டம் கூட்டமாக மக்கள் கூட ஆரம்பித்தனர். இதனால் எந்த நோக்கத்திற்காக பொது ஊரடங்கு மேற்கொள்ளப்பட்டதோ, அந்த நோக்கமே கேள்விக்குறியானது என்ற விமர்சனமும் எழுந்தது.

modi

இதனைத்தொடர்ந்து மீண்டும் 2வது முறையாக நாட்டு மக்களிடம் உரையாற்றிய மோடி, நாடு முதல் 21 நாள் ஊரடங்கு அமலுக்கு வரும் என்று அறிவித்தார். இந்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தாவிட்டால், நாடு 21 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விடும் என்றும் மோடி தெரிவித்தார்.

இந்த ஊரடங்கு உத்தரவு மக்களை பாதுகாக்கவே கொண்டுவரப்பட்டது என்று அரசு கூறினால் கூட, இதனால் அதிகம் பாதிப்புக்கு உள்ளானது அதே மக்கள் தான்.. அதிலும் குறிப்பாக சமூகத்தின் அடித்தட்டு, விளிம்பு நிலை மக்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டனர் என்றே சொல்ல வேண்டும்..

வேலை, சம்பளம் இல்லாமல் வாழ்வதாரத்தை இழந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்லும் அவலநிலை ஏற்பட்டது. இதில் தங்கள் ஊர்களுக்கு செல்லும் வழியிலேயே இரண்டு பேர் உயிரிழந்தது வேதனையின் உச்சம்..

delhi migrant workers

இந்த சூழலில் தான் கடந்த வாரம் மீண்டும் வீடியோ மூல்ம நாடு மக்களிடம் உரையாற்றிய மோடி ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணியளவில் அனைவரும் 9 நிமிடம் தங்கள் வீடுகளில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டு, மெழுகுவர்த்தி அல்லது டார்ச் லைட் அல்லது மொபைல் பிளாஷ்லைட்களின் மூலம் விளக்கேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

ஒரே நேரத்தில் விளக்கேற்றுவதன் மூலம் நாம் ஒற்றுமையாக உள்ளதை காட்டுவோம் என்று தெரிவித்த மோடி ஊரடங்கின் போது யாரும் தனியாக இல்லை என்றும் 130 கோடி மக்கள் ஒவ்வொருவருடனும் உள்ளதாகவும் கூறினார்.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள போது மோடி உரையாற்றப் போகிறார் என்ற செய்தி வந்ததுமே, அவர் என்னப் பேசுவார் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது கொரோனா பாதிப்பை குறைக்க அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளது என்று மோடி அறிவிப்பாரா அல்லது கொரோனா குறித்த ஏதேனும் முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் தான் மோடி, இந்த விளக்கேற்றும் அறிவிப்பை வெளியிட்டார்.

pm modi

ப. சிதம்பரம், ராகுல்காந்தி உள்ளிட்ட பல எதிர்க்கட்சி தலைவர்கள் இதுகுறித்து தங்கள் விமர்சனங்களை முன்வைத்தனர். கைதட்டுவதும், டார்ச் அடிப்பதும் மட்டுமே கொரோனா பிரச்சனையை தீர்க்கப் போவதில்லை என்று ராகுல்காந்தி மோடியை கிண்டல் செய்யும் விதமாக கருத்து தெரிவித்தார்.

பெரும்பாலான மக்கள் மோடியின் வேண்டுகோளை ஏற்று விளக்குகளையும், மெழுகுவர்த்திகளையும் ஏற்றினாலும், பலர் ஆர்வமிகுதியில் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். கொரோனாவின் தீவிரத்தை, ஆபத்தை உணராமல் மக்கள் தான் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்றால், அரசியல் தலைவர்களோ ஒரு படி மேலே போய் தீப்பந்தந்தை பிடித்துக் கொண்டு ஊர்வலம் சென்று கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை நடத்தினர்.

bjp mla raja singh

இந்த நிலையில் தான் நேற்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஊரடங்கு தேவை தான் என்றாலும், முன் திட்டமிடல் இல்லாத ஊரடங்கை மத்திய அரசு அறிவித்ததாக கூறிய அவர், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை போலவே, ஊரடங்கு உத்தரவும் அவசர கதியில் அமலுக்கு வந்துள்ளதாக அந்த கடிதத்தில் விமர்சித்திருந்தார்.

மேலும் கொரோனா விவகாரத்தில் ஏழை, எளிய அடித்தட்டு மக்களை பற்றி கவலைப்படாத மத்திய அரசு, பால்கனி மக்களுக்காக செயல்படும் பால்கனி அரசாக செயல்படுகிறது என்ற கடுமையான குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.

சீனாவில் கொரோனா பரவத் தொடங்கிய பிறகு மத்திய அரசுக்கு 4 மாத கால அவகாசம் இருந்தும், வெறும் 4 மணி நேர இடைவெளியில் ஊரடங்கை மோடி அறிவித்தது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

kamal new

இந்தியாவில் உள்ள முதன்மை எதிர்க்கட்சிகளே கொரோனா விவகாரத்தில் மத்திய அரசை விமர்சிக்காத நிலையில், கமல்ஹாசன் துணிவுடன் அரசின் தவறுகளை சுட்டுக்காட்டியுள்ளதையே இது காட்டுகிறது. கொரோனாவை அரசியலாக்க கமல் முயல்கிறார் என்ற கருத்து ஒருபக்கம் இருந்தாலும் கூட, கமலின் குற்றச்சாடுகளை முழுமையாக மறுத்துவிடவும் முடியவில்லை.

முதன்முறையாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதியான உடனேயே முறையான திட்டமிடலுடன் மத்திய விரைந்து செயல்பட்டிருந்தால் இன்றைய மோசமான நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்க மாட்டோம்.

india corona

கொரோனா என்பது இந்தியாவில் உருவான நோய் அல்ல, அப்படி இருக்கும் போது, அண்டைநாடான சீனாவில் இந்த நோய் அதிகரித்த போதே, விமானநிலையில் கடுமையான கட்டுப்பாடுகளையும், பரிசோதனைகளை செய்திருக்க வேண்டும் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.

ஊரடங்கை அமல்படுத்திவிட்டால் நோயை கட்டுப்படுத்தி விடலாம் என்று நினைத்து அரசு, மக்கள் வெளியேறுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. ஆனால் வீட்டில் இருக்கும் மக்களுக்கு யாருக்கெல்லாம் கொரோனா பாதிப்பு உள்ளது என்பதை கண்டறிய அரசு என்ன நடவடிக்கை மேற்கொண்டது..?

Coronavirus death toll in the US exceeds 6,000 ...

டெல்லி மாநாட்டில் கலந்தகொண்டவர்கள் மூலமாக அதிகமாக கொரோனா பரவியதாக கூறும் அரசு, அதற்கு முன்பாக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டவர்களிடம் இருந்து தான் நோய் பரவத்தொடங்கியது என ஏன் கூற மறுக்கிறது..?

ஊரடங்கு, மக்கள் வெளியில் நடமாட தடை போன்ற உத்தரவுகள் எல்லாம் சரி.. நோய் பாதிப்பு உள்ளவர்களை எப்படி அரசு கண்டறியப் போகிறது என்பதே நாம் இங்கு அச்சத்துடன் முன் வைக்கும் கேள்வி.. வெளிநாட்டு பயணம் மேற்கொண்டவர்கள், கொரோனா அறிகுறிகள் இருப்பவர்கள் தாமாகவே முன் வந்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அரசு கூறுகிறது.

ஆனால் கொரோனா தொடர்பான எந்த அறிகுறிகளும் தென்படாமலே பலருக்கு வைரஸ் தொற்று ஏற்படுவது சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.. இந்தியா போன்ற மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில், அறிகுறிகள் இல்லாமல் நோய் பரவினால் அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை..

மற்ற நாடுகளில் 10 லட்சம் பேரில் குறைந்தது 5000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. ஆனால் இந்தியாவிலோ 10 லட்சத்தில் வெறும் 29 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

corona virus n

இந்த சூழலில் இனிமேலாவது கொரோனாவை கட்டுப்படுத்த கைத்தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் என்று கூறாமல், பரிசோதனைகளை அதிகப்படுத்துதல், நோய் தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்துதல், ஊரடங்கின் போது ஏழை எளிய நடுத்தர மக்கள் பாதிக்கப்படாதவாறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்தல் ஆகியவற்றை எடுத்தால் நன்றாக இருக்கும்..

1newsnationuser1

Next Post

விறுவிறுப்பாக நடைபெறும் ஜெயலலிதா மணிமண்டபம் பணிகள்!!! அரசு மட்டும் ஊரடங்கினை மீறலாமா?

Tue Apr 7 , 2020
கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் தமிழக அரசு மட்டும் சில வடமாநில தொழிலாளர்களை கொண்டு ஜெயலிலதாவின் மணிமண்டபம் கட்டும் பணியினை விறுவிறுப்பாக நடத்திவருகின்றனர். உலக நாடுகளை நிலைக்குழைய செய்துவரும் கொரோனாவின் பாதிப்பிலிருந்து மீளவும். கட்டுப்படுத்தவும் தான் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு இதனை முறையாக பின்பற்றாமல் வடமாநில தொழிலாளர்களை ஜெயலலிதாவின் கட்டுமான பணிகளை மேற்கொள்ள வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஊரடங்கு […]
jeyalalitha govt 2

You May Like