
கோயம்புத்தூர்: கொரோனா அச்சத்தின் காரணமாக தனியார் மருத்துவமனைகளில் பிரசவம் உள்ளிட்ட முக்கிய சிகிச்சைகள் மேற்கொள்ளாத நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் ஒரு மாதத்தில் மட்டும் 937 பிரசவங்கள் பார்க்கப்பட்டுள்ளது இதுவே முதன் முறையாகும்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தீவிரம் அதிகரித்துவருகிறது. இதன் காரணமாக பல தனியார் மருத்துவமனைகளில் பிரசவம் உள்ளிட்ட முக்கிய சிகிச்சைகள் தற்போது மேற்கொள்வதில்லை. அப்படி சில நோய்களுக்கு சிகிச்சை அளித்தாலும், பல அடி தூரத்தில் நின்று தான் மருத்துவர்களும் சிகிச்சை அளிக்கின்றனர்.

இதன் காரணமாக தனியார் மருத்துவமனைகளில் பிரசவத்திற்கு சென்ற காலங்கள் மறந்து தற்போது அரசு மருத்துவமனைகளை அனைத்து தரப்பட்ட மக்களும் நாடத்தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் மே மாதத்தில் மட்டும் 937 பிரசவங்கள் ஏற்பட்டுள்ளது இதுவே முதன் முறையாகும்.

மேலும் இதே போன்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகள் அளிக்கப்படாததால், தேனி மாவட்ட அரசு மருத்துவமனையில் ஆயிரத்திற்கு மேல் கொரேனா காலக்கடத்தின் போது பிரசவங்கள் பார்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.