சசிகலா உடல்நிலை எப்படி உள்ளது..? அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம்.. தடுப்பூசியால் ஏற்படும் அடுத்தடுத்த மரணங்கள்.. ஹரியானாவில் பெண் சுகாதார ஊழியர் உயிரிழந்ததால் அதிர்ச்சி… சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற முடியாது.. விக்டோரியா மருத்துவமனை வெளியிட்ட தகவல்.. சசிகலா அதிமுகவில் இணைந்தாலும், இணையாவிட்டாலும் பிரச்சனை என்னமோ முதல்வருக்கு தான்.. பரபரக்கும் அரசியல் களம்.. "சசிகலாவுக்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்பு வேறு விதமா யோசிக்க வைக்குது.." சீமான் கருத்து.. ஒரு லாஜிக் வேணாமா..? வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு எதுக்கு பாஸ்டேக் கட்டணம்..? யானை மீது எரியும் டயரை வீசிய மனித மிருகங்கள்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ.. கமல்ஹாசனின் கழுத்தில் மிதிக்கும் பாலாஜி முருகதாஸ்.. வைரலாகும் பத்ரகாளி புகைப்படத்தால் சர்ச்சை… ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் 10% தள்ளுபடி.. ஆனா ஒரு கண்டிஷன்.. ஜெயலலிதாவின் வேதா இல்லம் பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு.. எப்போது முதல் தெரியுமா.? பறவைக் காய்ச்சல் அபாயம்..! எவை செய்யலாம்.. எவை செய்யக்கூடாது..! அரசு வெளியிட்ட நெறிமுறைகள் இதோ..! அதிர்ச்சி..! பிரபல வங்கி லாக்கரில் இருந்த 2 லட்சம் ரூபாய் பணம் கரையானுக்கு விருந்தான சோகம்..! அசத்தல் அம்சங்களுடன் வெளியான புது ஸ்மார்ட்போன்..! விலையை கேட்டா அசந்து போயிருவீங்க..! 90ஸ் கிட்ஸ் கனவு கன்னி சிம்ரனின் மகனா இது..? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..! சித்ராவின் கணவர் ஹேம்நாத் சைக்கோவை விட கொடூரமானவர்.. நண்பர் வெளியிட்ட பகீர் தகவல்கள்..

கோயம்பேடு சந்தையாக மாறுகிறதா மதுரை மார்க்கெட்? அதிரடி நடவடிக்கை எடுத்த ஆட்சியர்

கோயம்பேடு சந்தையாக மாறுகிறதா மதுரை மார்க்கெட்? அதிரடி நடவடிக்கை எடுத்த ஆட்சியர்

மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் பழ வியாபாரி உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் சந்தையினை மூட ஆட்சியர் வினய் உத்தரவு பிறப்பித்துள்ளார். கோயம்பேடு சந்தைப்போன்று மதுரை மாறிவிடுமோ? என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.


மதுரை மாவட்ட மக்கள் பெரும்பாலும் காய்கறி மற்றும் பழவியாபாரத்திற்காக மொத்த சந்தையான பரவை மற்றும் மாட்டுத்தாவணி மார்க்கெட்டினை தான் நம்பியுள்ளனர். தற்போது கொரோனா தீவிரம் அதிகரித்துவரும் நிலையில் மக்கள் அதிகம் கூடும் மொத்த சந்தைகளில் சமூக இடைவெளியின்றி மற்றும் முக கவசம் அணியாமல் இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துவருகிறது.

கோயம்பேடு சந்தையாக மாறுகிறதா மதுரை மார்க்கெட்? அதிரடி நடவடிக்கை எடுத்த ஆட்சியர்

குறிப்பாக மதுரை மாட்டுத்தாவணி பழச்சந்தையில் 242 மொத்த மற்றும் சில்லறை வியாபார கடைகள் இயங்கிவருகின்றன. கடைகள் அனைத்தும் ஒரு அடி இடைவெளியில் தான் செயல்பட்டுவருகிறது. இந்த நிலையில் தான் தற்போது 55 வயதான பழக்கடை உரிமையாளர் உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பது மற்ற வியாபாரிகளுக்கிடையே அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக மாட்டுத்தாவணி பழச்சந்தையிலிருந்து தான் விருதுநகர், சிவகங்கை போன்ற சில்லறை வியாபாரத்திற்கு வியாபாரிகள் பொருட்களை எடுத்துச்செல்வார்கள். எனவே இங்கிருந்து கொரோனா தொற்று மற்ற மாவட்டங்கள் மற்றும் பொதுமக்களுக்கு வேகமாக பரவாமல் இருக்கும் வண்ணம் அதிரடியாக பழச்சந்தையினை தற்காலிகமாக 10 நாட்களுக்கு மூட மாவட்ட ஆட்சி்யர் வினய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கோயம்பேடு சந்தையாக மாறுகிறதா மதுரை மார்க்கெட்? அதிரடி நடவடிக்கை எடுத்த ஆட்சியர்

மேலும் தென் மாவட்டத்தின் முக்கிய நகரான மதுரை மாவட்டத்திலுள்ள சந்தைகள், கோயம்பேடு போன்று மாறிவிடக்கூடாது எனவும், இதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்பதே தற்போது மக்களின் பொதுவான கருத்தாக உள்ளது.

1newsnationuser2

Next Post

கொரோனா பாதிக்கப்பட்ட சுகாதாரத் துறை அமைச்சரின் உடல்நிலை கவலைக்கிடம் : பிளாஸ்மா சிகிச்சை அளிக்க திட்டம்..

Fri Jun 19 , 2020
கொரோனா பாதிக்கப்பட்ட டெல்லி சுகாதாரத் துறை அமைச்சரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதை தொடர்ந்து, அவர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், கடந்த திங்கட்கிழமை இரவு, அதிக காய்ச்சல் மற்றும் மூச்சுத்திண்றல் காரணமாக ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து கடந்த 16-ம் தேதி, அவருக்கு கொரோனா பரிசோதன மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா ‘நெகட்டிவ்’ என்ற முடிவு வந்த நிலையில், 17-ம் தேதி […]
கொரோனா

You May Like