
கொரோனா அச்சத்தின் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து ஹோட்டல்களிலும் மீண்டும் பார்சல் உணவுகள் மட்டுமே வழங்கப்படும் என அனைத்து ஹோட்டல் சங்கங்கள் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் நாடு முழுவதும் 5 ஆம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போதிலும், சில தளர்வுகளை அரசு அறிவித்திருந்தது. அதன்படி அனைத்து உணவகங்களிலும் அமர்ந்து சாப்பிடலாம் என்பது போன்ற தளர்வுகளும் அதில் இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தைப்பொறுத்தவரை தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகிவரும் நிலையில் இதுவரை 54 ஆயிரத்திற்கு449 பேர் பாதிப்படைந்துள்ளனர். இதற்கிடையே தான் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்துவரும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் மீண்டும் முழு ஊரடங்கினை ஜூன் 30 தேதி வரை தமிழக அரசு அமலாக்கியுள்ளது.

ஆனால் கொரோனாவின் தீவிரத்தினை உணர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் சமூக தொற்றாக பரவி கூடாது என அந்தெந்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்திவருகிறது. அந்த வரிசையில் தமி்ழகத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் மக்கள் அமர்ந்து சாப்பிட்டு வரும் நிலையில் மீண்டும் பார்சல் உணவுகள் மட்டுமே வழங்கப்படும் என அனைத்து ஹோட்டல்கள் சங்கம் முடிவெடுத்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.