உலகிலேயே கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் மாணவர்கள் இணைந்து கொரோனா பார்டி நடத்தியுள்ளது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகம் கொண்ட அமெரிக்காவில் பரவலை கட்டுப்படுத்த அரசு திணறி வருகிறது. இங்கு கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,890,588 ஆகவும் பலி எண்ணிக்கை 1,32,101 ஆகவும் உள்ளது. இதில் 1,235,488 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் அமெரிக்காவில் டுசஸ்காலூசா மாகாணத்தில் மாணவர்கள் இணைந்து ஒரு பார்டி நடத்தியுள்ளனர். இதற்கு கொரோனா பார்டி என பெயரிட்டு இதில் கலந்து கொண்டு கொரோனா பாதிப்பு பெறும் முதல் நபருக்கு பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டுள்ளனர்.
இது குறித்து அந்த பகுதி அதிகாரி சோனியா மெக் கூறுகையில், “மாணவர்களின் இந்த செயல் முட்டாள் தனமானது. இதனால் நாட்டில் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார். இது குறித்து புகார் எதுவும் காவல்துறைக்கு அளிக்கப்படவில்லை என்பதாலும் தகவல் காவலர்களுக்கு தகுந்த நேரத்தில் கிடைக்கவில்லை என்பதாலும் ஒருவரும் கைது செய்யப்படவில்லை என தெரிகிறது. இது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.