
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மன அழுத்தத்தின் காரணமாக, கொரோனா நோயாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆயங்குடி கிராமத்தை சேர்ந்த ராஜசேகரன் என்வர் கடந்த 15 ஆம் தேதி சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டதன் காரணமாக பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து கொரோனா வார்டில் கடந்த 16 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த அவர், மனஉளைச்சலின் காரணமாக மருத்துவமனையில் இருந்த கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவ பணியாளர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணையில், மன அழுத்தத்தின் காரணமாக தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறுதியாகியுள்ளது. மேலும் தற்கொலை சம்பவம் தொடர்பாக மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் நிர்வாகத்திடம் போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர். இச்சம்பவம் மற்ற நோயாளிகள் மற்றும் மருத்துவமனை வளாகத்தில் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.