தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் கொரோனா நோய்த்தொற்று இருக்கும் நபருக்கு பொது வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் துபாயிலிருந்து வந்த இளைஞருக்கு தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்யாமல் பொது வார்டில் 2 நாட்கள் சிகிச்சைக்காக தங்க வைத்துள்ளனர். பின்பு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் இவருக்கு நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவருடன் இரண்டு நாட்கள் சகஜமாக பழகிய 10 செவிலியர்கள், 6 டாக்டர்கள், 12 பயிற்சி மருத்துவர்கள், 14 தூய்மைப் பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தற்போது தீவிர கண்காணிப்பில் உள்ளனர். மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் இளங்கோவன் அலட்சியத்தால் இந்த விபரீதம் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.