இந்தியாவில் இரு வேறு இடங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு பெற்றோர்களே கவனம் பலூனில் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு மாமியாரின் அந்தரங்க புகைப்படங்களை மருமகளுக்கு அனுப்பிய ஆசாமி கைது இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு தமிழகத்தை தாக்க மூன்றாவது புயல் வருகிறது அதுவும் இரட்டை புயல் வானிலை ஆய்வு மையம் தகவல் 47 வருடமாக இணைபிரியாத கணவன் மனைவி கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் ஒரே நேரத்தில் உயிரிழப்பு 2021 ஆண்டிற்கான பொதுவிடுமுறை பட்டியல் தயார் இந்தியாவில் மருத்துவ பரிசோதனையின் மேம்பட்ட கட்டங்களில் ஐந்து கோவிட் -19 தடுப்பூசி மருந்துகள் உள்ளன. விரைவில் இவை பயன்பாட்டிற்கு வரலாம் – எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை குளிர்காலத்தில் மாடுகளுக்கு போர்வை வழங்க உத்திரபிரதேச அரசு திட்டம் இந்திய விமான நிறுவனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை தற்போது 80 சதவீதமாக உயர்வு இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்.. நகம் கடிப்பது வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் தீங்கு விளைவிக்குமாம்.. எப்படி தெரியுமா..? பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா..? உங்களுக்கு BP இருக்கா..? அப்போ இந்த உணவை தொடவே தொடாதீங்க..! 50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..?

#BreakingNews : தமிழகத்தில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களிலும் உயரும் எண்ணிக்கை..

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 1 லட்சத்தை கடந்துள்ளது.

தமிழகத்தில்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வந்தாலும் நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்தபடியாக, அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து, 3,000 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு வந்த நிலையில், நேற்று முதன்முறையாக ஒரே நாளில் 4,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 2-வது நாளாக இன்றும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4,000-ஐ கடந்துள்ளது.

Coronavirus

இந்நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு தகுறித்து சுகாதாரத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் “ இன்று புதிதாக 4,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,02,721- ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 2,082 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 64,689-ஆக அதிகரித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் 2,221 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

செங்கல்பட்டில் இன்று மட்டும் 330 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால், அம்மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,139-ஆக அதிகரித்துள்ளது. மதுரையில் இன்று ஒரே நாளில் 287 பேருக்கு தொற்று கண்டறிப்பட்டதால் மொத்த பாதிப்பு 3,423-ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூரில் இன்று 172 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது இதனால் அங்கு மொத்த பாதிப்பு 4,343-ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் காஞ்சிபுரத்தில் 127 பேருக்கும், திருவண்ணாமலையில் 151 பேருக்கும், வேலூரில் 145 பேருக்கும், தேனியில் 126 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் 3,091 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதால், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 56,021-ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 64 பேர் உயிரிழந்ததால், கொரோனா பலி எண்ணிக்கை 1,385-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 58,378 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், 42,955 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றூ வருகின்றனர் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser1

Next Post

“யாரோ பொய் சொல்கின்றனர்..” லடாக் எல்லை விவகாரம் குறித்து ராகுல்காந்தி கருத்து..

Fri Jul 3 , 2020
லடாக் எல்லை விவகாரத்தில் யாரோ பொய் சொல்கின்றனர் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15-ம் தேதி, இந்திய – சீன ராணுவத்தினருக்கு ஏற்பட்ட மோதலில் 15 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் 35 வரை இறந்திருக்கக்கூடும் என்று கூறப்பட்டாலும், அந்நாட்டில் ஏற்பட்ட உயிர்ச்சேதம் குறித்து சீனா வெளியிடவில்லை. இதனையடுத்து இரு நாட்டின் எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் […]
ராகுல்காந்தி

You May Like