கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணபிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..? ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்.. பிரபல வங்கியில் வேலை வாய்ப்பு..! 220 காலியிடங்கள்..! ஒரே நாளில் இவ்வளவு உயர்ந்த தங்கத்தின் விலை… நகை வாங்குவோர் அதிர்ச்சி… இந்த மாவட்டங்களில் மட்டும் அதீத கனமழையும், பெரும் பாதிப்பை ஏற்படுத்துமாம் "புரவி" புயல்… வானிலை ஆய்வு மையம்..

கொரோனா முன்னெச்சரிக்கை; தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகள், திரையரங்குகளை மூட தமிழக அரசு உத்தரவு

tamilnadu government

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகள் திரையரங்குகள் மூடல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


தொடர்ந்து தமிழகத்தில் வைரஸ் பரவுவதலை தடுக்க மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்குறித்த அறிக்கையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார். இதில் வெளிநாடுகளில் இருந்து சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய விமான 4 நிலையங்கள் மூலம் தமிழகம் வரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவதற்காக வசதிகள் தயார் நிலையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

201901130313240087 Edappadi Palanisamy interview SECVPF


தமிழகத்தின் அண்டை மாநிலங்களிலிருந்து வைரஸ் பரவமால் இருப்பதை தடுக்கும் விதமாக, உடனடியாக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு சோதனை சாவடிகள், நோய் கண்காணிப்பு பணிகள் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளை போர்க்கால அடிப்படையில் அனைத்து துறைகளின் உதவியோடு மேற்கொள்ளப்படுகிறது.


குழந்தைகளுக்கு பரவமால் இருப்பதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து மழலையர் பள்ளிகள் மற்றும் 1 முதல் 5 வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளிகளுக்கு மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

schoolnkids 07


மேலும் தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தருமபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள எல்லையோர வட்டங்களில் உள்ள திரையரங்குகளையும், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களையும் வரும் மார்ச் 31ஆம் தேதி மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள திரையரங்குகள், வணிக வளாகங்கள், மக்கள் கூடும் இடங்களில் தூய்மைப்படுத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

trichy corono 1 1

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட தமிழக அரசின் சார்பில் 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு 30 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து தினமும் அறிக்கையினை மாவட்ட ஆட்சியர்கள் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பாக பொதுமக்களுக்காக தமிழக அரசு வழங்கியுள்ள அறிவுரைகள்

தமிழகத்தில் அடுத்த 15 தினங்களுக்கு மக்கள் அதிகம் பொது இடங்களில் கூடுவதையும், பிற மாநிலங்களுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்


கூட்டம் நிறைந்த இடங்களுக்கு வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுள்ளவர்களை அழைத்து செல்ல வேண்டாம்.


தனி நபர் சுகாதரத்தினை கைபிடிக்க வேண்டும், அடிக்கடி கைகளை கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்

கைகளை கழுவாமல் முகத்தினை தொடுவதை தவிர்க்க வேண்டும்
விடுமுறை நாட்களில் குழந்தைகளை குழுவாக விளையாடமல் பார்த்துக்கொள்ள வேண்டும்


தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை முறையாக பின்பற்றினாலே கொரோனா தொற்றிலிருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும்.

மேலும் தமிழகத்தில் கொரோனா பரவமால் இருக்க மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser3

Next Post

மாஸ்டர் படத்தின் தெறிக்கும் ட்ராக்-லிஸ்ட்..!

Sun Mar 15 , 2020
மாஸ்டர் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களின் ட்ராக் லிஸ்ட் வெளியானது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. மார்ச் 9-ம் தேதி இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இப்படத்தின் இசை வெளியீட்டு விழா எம்.ஆர்.சி நகரில் உள்ள லீலா பேலசில் இன்று நடைபெற உள்ளது. அனிருத் இசை அமைத்துள்ள இப்படத்தில், தீம் மியூசிக் உடன் சேர்த்து மொத்தம் 8 பாடல்கள் உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]
WhatsApp Image 2020 03 15 at 1.31.21 PM

You May Like