கொரோனா முதல் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் வரை, அனைத்தையும் சூர்யா முன்பே கணித்துவிட்டார் என்று வைரலான மீம்ஸ்களின் தொகுப்பு..

கொரோனா பரவத் தொடங்கிய போது, நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் இது போன்ற வைரஸ் பரவலை தனது 7-ம் அறிவு படத்திலேயே கூறியிருப்பார் என்ற மீம்ஸ்களை பரப்பி வந்தனர். ஆரம்பத்தில் சூர்யாவை ஒரு தீர்க்கதர்சி போல சித்தரித்து மீம்ஸ்களை பரப்பினாலும், கொரொனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்ககள் ஒவ்வொன்றையுமே, சூர்யா முன்பே கணித்து விட்டதாக மீம்ஸ்கள் வைரலானது.
உதாரணமாக திருமணத்திற்கு குறிப்பிட்ட அளவில் மக்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. அதற்கு சூர்யாவின் மாசு என்கிற மாசிலாமணி படத்தில் இடம்பெற்ற பாடலில் சூர்யாவின் திருமணத்தில் குறைவானோரே கலந்து கொண்டிருப்பர். அதனை ஒப்பிட்டு ‘திருமணத்திற்கு 10 பேர் மட்டுமே வர வேண்டும் என்று அன்றே கணித்தார் சூர்யா’ என்று வைரலான மீம் தான் இது.

சூர்யாவின் 24 படத்தில், சத்யன் சூர்யாவிற்கு 144 நம்பர் டோக்கனை வழங்குவார். உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தியதை அதனோடு ஒப்பிட்டு வைரலான மீம் தான் இது..

கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் அதிகமாக கொரோனா பரவியதால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் நியூயார்க் நகரம் வெறிச்சோடி காணப்பட்டது. சில்லுனு ஒரு காதல் படத்தில் இடம்பெற்ற ‘நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்’பாடலை வைத்து தற்போதைய நியூயார்க் நகரின் புகைப்படத்தை வைத்து, இதனை சூர்யா அன்றே கணித்துவிட்டதாக பரவிய மீம் இதோ..

ஊரடங்கில் ஒரு சில தளர்வுகளை அறிவித்த அரசு, ஆட்டோவில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. கஜினி படத்தில் சூர்யா ஆட்டோவில் பயணிக்கு காட்சியை வைத்து, இதனையும் சூர்யா அன்றே கணித்துவிட்டதாக மீம் ஒன்றை உருவாக்கினர் மீம் கிரியேட்டர்கள்.

கொரோனாவைக் கட்டுப்படுத்த சமூக விலகல், கை கொடுப்பதை தவிர்த்தல், தனிமனித இடைவெளி போன்றவற்றை பின்பற்ற வேண்டும் என்று அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனையும் சூர்யாவோடு ஒப்பிட்டுள்ளனர் மீம் கிரியேட்டர்கள். வேல் படத்தில் அசின் கை கொடுக்க வரும் போது, சூர்யா அதனை தவிர்த்து வணக்கம் கூறுவார்.. எனவே கைகொடுப்பதை தவிர்க்க வேண்டும் என சூர்யா அன்றே சொன்னார் என்ற மீம் தான் இது..

சிங்கம் படத்தில் ஒரு காட்சியில் சூர்யா, அனுஷ்காவுடன் உரையாடும் காட்சியில் இடைவெளி விட்டு நிற்பார். இதனை வைத்து உலகமே தற்போது சமூக விலகலை பின்பற்றுகிறது என்று சமூக இடைவெளியையும் சூர்யா அன்றே கணித்ததாக கூறும் மீம் இதோ..

அடுத்த மீம்ஸும் சமூக இடைவெளி பற்றியது தான். கஜினி படத்தில் கூட்டமாக நிற்பவர்களை அன்றே போக வைத்தார் சூர்யா என்ற நிரூபிக்கும் மீம்..

பொதுவெளியில் செல்லும் போது அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அரசு வலியுறுத்தியுள்ளது. மாஸ்க் அணிய வேண்டும் என்பதையும் சூர்யா, சிங்கம் 3 படத்திலேயே கூறிவிட்டார் என்கின்றனர் மீம் கிரியேட்டர்கள்.

காவல்துறையினர் ட்ரோன் மூலம் கண்காணிப்பதை, 2017-ம் ஆண்டே சூர்யா கணித்திருப்பார் என்ற மீம் இதோ..

கொரோனா தொடர்பாக மட்டும், சூர்யா முன்பே கணிக்கவில்லை. அண்மையில் உருவெடுத்த வெட்டுக்கிளி பிரச்சனையை கூட, சூர்யா தனது காப்பான் படத்தில் கூறியிருப்பார் என்ற வைரலான மீம்

இவையெல்லாம் கூட பரவாயில்லை.. கில்லி படத்தில் தனலட்சுமி (த்ரிஷா) விஜய்யை விரும்புவார் என்று கூட சூர்யா அன்றே கணித்துவிட்டாராம்.. எப்படி தெரியுமா.. சூர்யாவின் பெரியண்ணா படத்தில் ‘நா தம் அடிக்குற ஸ்டைல பாத்து தனலட்சுமி விரும்புச்சு..” என்ற பாடல் இடம்பெற்றிருக்கும். கில்லி படத்தில் விஜய் த்ரிஷா இடம்பெற்றிருக்கும் காட்சியை வைத்து வைரலான மீம் இது தான்..

அவ்வளவு ஏன்..? கேரளாவில் பலாப்பழத்திற்குள் வெடியை வைத்து கொடுத்து யானையை கொன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. யானைகளை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும் என்று சூர்யா ஏழாம் அறிவு படத்திலே கூறிவிட்டார் என்று வைரலான மீம் இதோ..

நதிகள் வறண்டதை கூட சூர்யா முன்பே கணித்துவிட்டார் என்று பரவிய மீம்ஸ் தான் இது..

அவெஞ்சர்ஸ் சூப்பர் ஹீரோவான ஹல்க் சண்டை போடுவதை கூட சூர்யா கணித்துவிட்டார் என்றால் உங்கள் நம்ப முடிகிறதா.. இது தான் அந்த மீம்..

ரெமோ, பிகில் போன்ற தமிழ் படங்கள் மட்டுமின்றி, அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் ஹாலிவுட் படத்தையும் சூர்யா கணித்துவிட்டார் பாருங்கள்..

