பிரதமர் மனைவிக்கு கொரோனா சர்க்கரை உணவு உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றி அமைக்கிறது. அதை கட்டுப்படுத்த முடியுமா? இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். உலகிலேயே பணக்கார கடவுள் யார்? சொத்து மதிப்பு எவ்வளவு தெரியனுமா? இத படிங்க இத மறந்துவிடாதீர்கள் டிசம்பர் 1 முதல் ATM-ல் பணம் எடுக்க கார்டு மட்டும் போதாது – இது ரொம்ப முக்கியம். இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருங்க – உங்க மாவட்டத்தில் கனமழை ஹவுஸ் ஓனர்கள் கவனத்திற்கு.. காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. இன்று.. 2020-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்.. ஆனால் இந்தியாவில் பார்க்க முடியுமா..? மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..?

கொரோனா வைரஸ்.. உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,000ஐ தாண்டியது.. இந்தியாவில் 125 பேர் பாதிப்பு..

கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,000-ஐ தாண்டியுள்ள நிலையில், உலகம் முழுவதும் சுமார் 1,75,536 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

corona

கடந்த டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகை அச்சுறுத்தி வரும் கொடிய ஆட்கொல்லி நோயாக மாறி வருகிறது. இதனால் சீனாவில் மட்டும் 3,213 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் சுமார் 80,000 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் சுமார் 68,000 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சீனாவை தவிர்த்து அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக இத்தாலி மாறியுள்ளது. அந்நாட்டில் சுமார் 28,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,158 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதனிடையே இந்தியாவில் கொரொனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 125-ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 36 பேரும், கேரளாவில் 22 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உத்திரப்பிரதேசத்தில் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடகாவில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. டெல்லியில் 7 பேருக்கு கோரோனா பாதிப்பு உறுதியாகி உள்ள நிலையில், தெலங்கானா, லடாக்கில் தலா 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

corona

ஜம்மு காஷ்மீரில் 3 பேருக்கும், ராஜஸ்தானில் இருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஆந்திரா, ஒடிஷா, பஞ்சாப், தமிழ்நாடு, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதே போல் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெளிநாட்டவர் 14 பேருக்கு வைரஸ் பாதிப்பு உள்ளது. இதுவரை இந்தியாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

இந்தியாவில் 3வது உயிரிழப்பு.. கொரோனா காரணமாக மும்பையில் முதியவர் பலி..

Tue Mar 17 , 2020
கொரோனா காரணமாக மும்பையில் ஒரு முதியவர் உயிரிழந்துள்ளதால், இந்தியாவில் 3வது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதனிடையே இந்தியாவில் கொரொனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 125-ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 36 பேரும், கேரளாவில் 22 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்திரப்பிரதேசத்தில் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடகாவில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. டெல்லியில் 7 பேருக்கு […]
கொரோனா உயிரிழப்புகளை மறைப்பதால் அரசிற்கு என்ன பயன்? இதனை மறைக்கவும் முடியாது என முதல்வர் திட்டவட்டம்

You May Like