மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

சீன தேசியக் கொடியில் கொரோனா வைரஸ் வடிவங்கள்… சீனா அரசு கடும் கண்டனம்…

டென்மார்க் நாட்டில் ஜில்லண்ட் போஸ்டர்ன் என்ற பத்திரிகையில் சீன தேசியக் கொடியில் உள்ள ஐந்து நட்சத்திரங்கள் நீக்கி அதற்கு பதிலாக ஐந்து கொரோனா வைரஸ் வடிவங்கள் அமைக்கப்பட்ட கார்டூனுக்கு சீனா அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

china flag

சீனாவில் வூஹான் நகரிலிருந்து பரவியதாக் சொல்லப்படும் கொரோனா வைரஸ். இதனை ஏற்காமல் இல்லை என சீன அரசு மறுத்து வருகிறது. இதைதொடர்ந்து, அவ்வப்போது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ‘சைனீஸ் வைரஸ்’ என்றே குறிப்பிட்டுப் பேசி வந்தார். சீன அதிபர் ஜின்பிங் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்-உடன் டெலிபோனில் பேசியதையடுத்து, இனிமேல் அப்படி பேசப் போவதில்லை என்று டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.

இந்நிலையில், டென்மார்க் நாட்டின் ஜில்லண்ட் போஸ்டர்ன் என்ற பத்திரிகை கடந்த 23- ந் தேதி ஒரு கார்ட்டூன் வெளியிட்டிருந்தது. அந்த கார்ட்டூனில் சீன தேசியக் கொடியில் உள்ள ஐந்து நட்சத்திரங்களை நீக்கி அதற்கு பதிலாக ஐந்து கொரோனா வைரஸ் வடிவங்கள் இடம் பெற்றிருந்தன. இதனால் சீன அரசு கோபமடைந்து கார்ட்டூன் வெளியிட்ட ஜில்லண்ட் போஸ்டர்ன் பத்திரிகை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமென்று சீனா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், டென்மார்க்கில் உள்ள சீனத் தூதரகம், ”இந்த கார்ட்டூன் சீன மக்களின் மனதைக் கடுமையாக வேதனையடையச் செய்துள்ளது.

பேச்சு சுதந்திரத்தின் எல்லையைத் தாண்டி இந்த கார்ட்டூன் வரையப்பட்டுள்ளது. இதை வரைந்த நீச் போ போஜ்சன் எங்கள் மக்களிடத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்” என வலியுறுத்தியது. ஆனால், சீன அரசிடமோ மக்களிடமோ மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிற அவசியம் எங்களுக்கு இல்லை என்று டென்மார்க் மறுத்து விட்டது.

இது குறித்து டென்மார்க் பிரதமர் மெட் ஃப்ரெட்ரிக்ஸன் கூறுகையில், ”எங்கள் நாட்டில் பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் உள்ளது போல வரைவதற்கும சுதந்திரம் உள்ளது” என்றார். ஜில்லண்ட் போஸ்டர்ன் எடிட்டர் ஜேகாப் நைப்ரோ கூறுகையில், ”நாங்கள் செய்தது தவறு இல்லை. எனவே, மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

1newsnationuser2

Next Post

ஒருசில ரசிகர்களால் அஜித் நிச்சயம் அசிங்கப்படுவார்... நடிகை குஷ்பு ட்வீட்...

Wed Apr 1 , 2020
டிவிட்டரில் அஜித் போட்டோவை டிபி-யாக வைத்திருந்த நபர் ஒருவரின் பதிவால் கோபமடைந்த குஷ்பூ, உங்களால் அஜித் நிச்சயம் அசிங்கப்படுவார் என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவரிய கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும், படப்பிடிப்பு இல்லாமல் திரையுலகமும் முடங்கியது. இதனால், பெப்சி அமைப்பைச் சேர்ந்த ஊழியர்களுக்கு நன்கொடை வழங்கும் விதமாக அனைத்து […]
ajith-will-surely-be-ugly-by-fans-actress-khushboo-tweeted

You May Like