இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாலிவுட் பாடகி கனிகா கபூர்…பிரபலங்கள் மத்தியில் பீதி…

கொரோனா மூலம் பாதிக்கப்பட்டிருக்கும் பாலிவுட் பாடகி கனிகா கபூர் பல்வேறு பிரபலங்கள் உடன் நெருக்கமாக இருந்திருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

kanika kapoor

பாலிவுட் பாடகி கனிகா கபூர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது பிரபலங்கள், அரசியல்வாதிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
லோக்சபா எம்பிக்கள், பிரபலங்கள் உடன் நெருக்கமாக இருந்திருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. லண்டனில் இருந்து இந்தியா வந்த கனிகா கபூருக்கு கடந்த 16ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது.

1

இதற்கு முன் கனிகா கபூர் கலந்து கொண்டபல்வேறு பார்ட்டிகளில் மத்திய பாஜக தலைவர்கள், லோக்சபா எம்பிக்கள் பலர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.இதனால்அவர்களுக்கும் கொரோனா ஏற்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கொரோனா சோதனையில் தப்பியது எப்படி?கனிகா கபூர் கொரோனாவால் எப்போது, எப்படி பாதிக்கப்பட்டார் என்பதை சுருக்கமாக பார்க்கலாம்….

Kanika Kapoor Corona Virus

மார்ச் 9 கனிகா கபூர் லண்டனில் இருந்து மும்பை வந்துள்ளார். அப்போதே இவருக்கு கொரோனா இருந்துள்ளது. மார்ச் 11ல் கனிகாb கபூர் லக்னோ சென்றுள்ளார். மார்ச் 13,14,15 தேதிகளில் இவர் லக்னோவில் பார்ட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இதில் 14ம் தேதியில் கலந்து கொண்ட பார்டியில்தான் பாஜக எம்பிக்கள் பலர் உடன் இருந்துள்ளனர்.

மார்ச் 16 கனிகா கபூருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. கனிகா கபூர் கலந்து கொண்ட பார்டிகளில் மொத்தம் 300 பேர் கலந்து கொண்டுள்ளனர். இரண்டாவது பார்டியில் 35 பேர் இருந்துள்ளனர். இதில் பாஜக மூத்த தலைவரான வசுந்தரா ராஜே, அவரது மகனும் லோக்சபா எம்.பி.யுமான துஷ்யந்த், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரைன், பாஜக எம்பி அனுபிரியா பட்டேல் இன்னும் பலர் கலந்திருக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

corona

இந்த நிலையில் இந்த பார்ட்டியில் வேறு யாரெல்லாம் கலந்து கொண்டனர் என்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளது . அதன்படி இந்த பார்டியில் மத்திய பாஜக அமைச்சர்கள் ராஜ்வர்தன் ரத்தோர், பாஜக எம்பி மதுரா ஹேமா மாலினி, மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம், காங்கிரஸ் மூத்த உறுப்பினர் குமாரி செல்ஜா, குத்துசண்டை வீரர் எம்பி மேரி கோம் ஆகியோர் கலந்து கொண்டு உள்ளனர் .

kanika kapoorr

அதேபோல் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த உறுப்பினர் சஞ்சய் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் திபேந்தர் ஹூடா , ஜிதின் பிரசதா ஆகியோர் இதில் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் மூவரும் தற்போது தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளனர்.

இன்னொரு பக்கம் லோக்சபா எம்.பி துஷ்யந்த் இரண்டு நாட்களுக்கு முன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார்.பாலிவுட் பிரபலம் இதனால் சந்தேகத்தின் பெயரில் குடியரசுத் தலைவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவு வெளியாகவில்லை. இவரின் அனைத்து அப்பாய்ண்ட்மெண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ராஷ்டிரியபதி பவனில் இதற்காக தீவிர சோதனை நடந்து வருகிறது.

kanikakopoor

காண்டாக்ட் டிரெஸ் முறை மூலம் கனிகா யாரை எல்லாம் சந்தித்தார். அவர்கள் யாரை எல்லாம் சந்தித்தார்கள் என்ற விவரமும் வெளியாகி உள்ளது.இவர் 14ம் தேதி நடந்த விழாவில் பாஜகவின் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, அவரது மகனும் லோக்சபா எம்.பி.யுமான துஷ்யந்த், பாஜக உத்தர பிரதேச அமைச்சர் ஜெய் பிரதாப் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜிதின் சிங் ஆகியோரை சந்தித்துள்ளார். துஷ்யந்த் சிங் கனிகாவை சந்தித்துவிட்டு, அதன்பின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஸ்மிரிதி இராணி, ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்துள்ளார்.

அதேபோல் துஷ்யந்த் சிங் ரயில்வேத்துறை, போக்குவரத்துறை துறை அதிகாரிங்கள் உடன் ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளார். இதில் பல ஐஏஎஸ் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். அதேபோல் துஷ்யந்த் பாஜகவின் வருண் காந்தி, தீபக் ஹூடா ஆகியோரை 15ம் தேதிசந்தித்துள்ளார். கனிகா கபூரை சந்தித்த பாஜக உத்தர பிரதேச அமைச்சர் ஜெய் பிரதாப் சிங் அதன்பின் உத்தர பிரதேசத்தில் அமைச்சரவை மீட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார்.

corona 3

14ம் தேதி நடந்த விழாவில் கிரிக்கெட் வீரர் ஒருவரும், பாலிவுட், கோலிவுட் பிரபலங்கள் சிலரும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில் முழுக்க முழுக்க பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதனால் பிரபலங்கள் மத்தியில் தற்போது கொரோனா அச்சம் எழுந்துள்ளது.

1newsnationuser2

Next Post

இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தாக்கம்.. எந்த வெளிநாட்டு பயணமும் மேற்கொள்ளாத பெண்ணிற்கு பாதிப்பு இருப்பதால் அதிர்ச்சி..

Sat Mar 21 , 2020
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், எந்த வெளிநாட்டு பயனமும் மேற்கொள்ளாத புனேவை சேர்ந்த பெண்ணிற்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இத்தாலி சுற்றுலாப் பயணி ஒருவர் உட்பட 5 பேர் இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதுவரை 283 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் மகாராஷ்டிர […]
coronaviurs

You May Like