இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

கொரோனா அச்சம்;தன்னைத் தானே தனிமைப்படுத்திய அதிபர்

கொரோனா வைரஸ் பீதி காரணமாக, போர்ச்சுக்கல் அதிபர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார்.

202003100430264280 Corona Virus Panic The Portuguese Chancellor who isolated SECVPF


சீனாவின் உகான் நகரில் தோன்றிய உயிர்க்கொல்லியான கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000-ஐ தாண்டியது. இந்நிலையில், போர்ச்சுக்கலில் இதுவரை 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்த சூழலில் தலைநகர் லிஸ்பனில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தை சேர்ந்த மாணவர்கள் குழு ஒன்று அதிபர் மாளிகைக்கு சென்று அந்த நாட்டின் அதிபர் மார்செலோ ரெபெலோ டி சவுசாவை சந்தித்து பேசினர். அதனை தொடர்ந்து அவர்களோடு அதிபர் மார்செலோ குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

அதிபர் மாளிகைக்கு சென்று வந்த மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கூடத்தை சேர்ந்த ஒரு மாணவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, உடனடியாக அந்த பள்ளிக்கூடம் மூடப்பட்டது.

ஆனால், அதிபர் மாளிகையை பார்வையிட்ட மாணவர் குழுவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர் இடம் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டது. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொள்வதாக அதிபர் மார்செலோ அறிவித்தார். அதன்படி அவர் அனைத்து பொது நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு வீட்டிலேயே தங்கியுள்ளார். அதே சமயம் அவருக்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

1newsnationuser4

Next Post

கச்சா எண்ணெய் விலை பெருமளவில் சரிவு; ஆனால் பெட்ரோல், டீசல் விலையோ..?

Tue Mar 10 , 2020
கச்சா எண்ணெய் விலை பெருமளவில் சரிந்தும், பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகளும், டீசல் லிட்டருக்கு 27 காசுகள் மட்டுமே குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல், சவுதி அரேபியா கச்சா எண்ணெய் விலையை கணிசமாக  குறைத்தது போன்ற காரணங்களால் கச்சா எண்ணெய் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.   சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்கின்றன. தற்போது, கச்சா எண்ணையின் விலை […]
pjimage 11 3

You May Like