ராமேஸ்வரத்தில் இன்று சூரியனைச் சுற்றிக் காணப்பட்ட ஒளிவட்டம்… சுமார் 30 நிமிடங்களாக காட்சி அளித்தது… வங்கிக் கணக்கில் பறிபோன பணம்… யார் என்று அறிந்தும் கூற மறுத்த வங்கி அதிகாரிகள்… காதல் மனைவியை கன்னாபின்னமாக வெட்டிய கணவன்…. ஆதரவின்றி தவிக்கும் கைக்குழந்தைகள்.. உங்களுடைய பான் கார்டு தொலைந்து விட்டதா? இவ்வாறு செய்து பெற்று கொள்ளலாம்.. ##BREAKING NEWS : இன்று தமிழகத்தில் புதிதாக 5,609 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது புதிதாக திருட்டு தொழிலில் இறங்கிய புள்ளிங்கோ…வச்சு செய்த மக்கள்…. கண் புரை ஏற்பட்டுள்ளதா? அறுவை சிகிச்சையின்றி எளிய முறையில் நீக்கலாம்…. கணவன் போனை எடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட மனைவி… மனைவியைத் தொடர்ந்து கணவனும் தற்கொலை… வங்கிகளில் கொண்டுவந்துள்ள புதிய மாற்றங்கள்… இனி மாத சராசரி தொகை இவ்வளவு இருக்கவேண்டும்… தன் காதல் கணவரைச் சேர்த்து வைக்கக்கோரி "ஈரமான ரோஜாவே" நடிகை காவல் நிலையத்தில் புகார்… ஐந்து சிறுமிகளை ஒரே நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்த முதியவர்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்யும்.. இந்த 2 மாவட்டங்களில் மட்டும் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்.. கொரோனாவால் பட்டினி கிடக்கும் யானைகள்..! உதவுமா தமிழக அரசு..? கொரோனாவை தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜு அணிந்துள்ள அந்த அட்டையின் ரகசியம் என்ன தெரியுமா..? கொரோனா தடுப்பூசி வந்த பிறகும், இதே நிலை தான் தொடரும்.. எந்த மேஜிக்கும் நடக்காது.. அமெரிக்க விஞ்ஞானி வெளியிட்ட பகீர் தகவல்..

எந்த அளவுக்கு மக்கள் ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு குறையும் – முதல்வர் பழனிசாமி

மக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும், எந்த அளவுக்கு ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு குறையும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு

சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டியூட் வளாகத்தில் அமைந்துள்ள கொரொனா சிறப்பு மருத்துவமனையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ரூ. 127 கோடி செல்வில் அமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனையில் 750 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வரிடம் விளக்கினார்.

guindy hospital

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி “ கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்காக பல்வேறு புதிய மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கிண்டி கிங்ஸ் இன்ஸ்டியூட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய பிரத்யேக கொரோனா மருத்துவமனையை அரசு அமைத்துள்ளது.

எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவமனைகளுக்கு இணையான தரத்தில் இந்த 4 மாடி மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது. 100 மருத்துவர்கள், 90 செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் கொரோனா தடுப்பு பணிக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர். குறிப்பாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு வருபவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளும் இங்கு செய்யப்பட்டுள்ளது.

202007071758252573 Chief Minister Palanisamy inaugurates Corona Specialty SECVPF

தமிழகம் முழுவதும் 33,368 படுக்கை வசதிகளுடன் கூடிய கோவிட் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. நாள் ஒன்றுக்கு சுமார் 35,000 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. வெண்டிலேட்டர்கள், பிபிஇ கிட், மாஸ்ட் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் தேவையான அளவில் உள்ளன. சென்னையில் படிப்படியாக நோய்த்தொற்று குறைந்து வருகிறது. மக்கள் முழு ஒத்துழைப்பு நல்கினால் தான் நோய்ப் பரவலை கட்டுப்படுத்த முடியும். அரசின் வழிமுறைகளை எந்த அளவுக்கு மக்கள் ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு பாதிப்பு குறையும்.

தமிழகத்தில் சமூக பரவல் ஏற்படவில்லை. இந்தியாவிலேயே தமிழக அரசு மிகச்சிறப்பான முறையில் செயல்பட்டதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுக்குள் உள்ளது, பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது. நோய்த் தொற்றையும் கட்டுப்படுத்த வேண்டும், வாழ்வாதாரத்தை பாதுக்காக்க வேண்டும் என்பது அரசுக்கு சவாலாக உள்ளது. ஊரடங்கை தொடர்ந்து நீட்டித்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஊரடங்கிற்கு ஒத்துழைத்த சென்னை, மதுரை மக்களுக்கு பாராட்டுகள். பொதுமக்கள் வெளியே செல்லும் போது முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்:” என்று தெரிவித்தார்.

1newsnationuser1

Next Post

#BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு..

Tue Jul 7 , 2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ் ஆனதால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 71,000-ஐ கடந்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வந்தாலும் நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்தபடியாக, அதிகம் கொரோனா பாதித்த […]
கொரோனா

You May Like