மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..! ரூ.10,000 செலுத்தினால் போதும்..! முடிவில் 16 லட்சம் கிடைக்கும்..! சென்னை மக்களே உஷார்..! இரண்டு நாட்களில் பிடிபட்ட 123 பாம்புகள்..! காரணம் இது தான்..! சிறுநீரக சிகிச்சைக்கு வந்த சிறுமி 6 மாத கர்ப்பம்..! போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..! வட இந்தியாவை போலவே தென் இந்தியாவிலும் காற்று மாசுபாடு அதிகரிப்பு..! கிராமப்புறங்கள் தான் அதிக காரணம்..! தமிழகத்தில், 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் புதிய ஆபத்து.. இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆரஞ்சு பழம்..! ஒரு பழம் 1.425 கிலோ..!

கொரொனாவை முடிவுக்கு கொண்டு வரும் சீனா.. ஆபத்தான வைரஸ் எப்படி கட்டுப்படுத்தப்பட்டது..?

சமீபத்திய புள்ளிவிவரங்களின் படி சீனாவில் இதுவரை 81,093 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,270 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 72,703 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மீண்டு வருவதை இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகிறது. கொரோனா பெருந்தொற்று நோயை சீனா எதிர்கொண்டது எப்படி..? அங்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன..? ஆகியவை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

china corona

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய் உஹான் நகரில், கடந்த சில நாட்களாக புதிதாக யாருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை. ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.தொடக்கத்தில் இந்த கொரோனா வைரஸின் தாக்கத்தை சீனாவால் மதிப்பிட முடியவில்லை.

பின்னர் அந்த வைரஸின் தீவிரத்தை உணர்ந்தது மட்டுமின்றி, அதில் இருந்து மீள்வதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டது. நோய்த் தொற்று பரவுவதை தடுக்க, சீனாவில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் அனைத்து நகரங்களையும் முடக்கியது. இந்தக் காலக்கட்டத்தில் அனைத்து அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவை மூடப்பட்டன.

மேலும் அனைத்து இடங்களிலும் நோய் தொற்று பரவாமல் தடுக்க கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டன. அதுமட்டுமின்றி, அரசின் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சுகாதார குறியீடு என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது.

china corona 1

இதன்மூலம் சிவப்பு, மஞ்சள், பச்சை ஆகிய நிறக் குறியீடுகள் நோய் தொற்றின் வீரியம் கணக்கிடப்பட்டது. மக்கள் தாங்கள் அளித்த பயண விவரங்களின் படி, அவர்களுக்கு எந்த நிறம் என்று குறியீடு வழங்கப்பட்டது. அந்த நிறங்களின் அடிப்படையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன.

நோய் தொற்று இல்லாத மக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். ஒருக்கட்டத்தில் நோயின் தீவிரத்தை உணர்ந்த சீன அரசு, வெறும் 11 நாட்களில் புதிய மருத்துவமனையை கட்டியது. இதனால் படுக்கைகள், சுகாதார வசதிகளில் குறைபாடு ஏற்படாமால் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

கொரோனா பாதித்த மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் வழங்க ரோபோட்கள் பயன்படுத்தப்பட்டன. இதனால் கொரோனா பரவுதல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டது.

italy corona

கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக, 550 தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை சீன அரசு மூடியது. அதேபோல் கொரோனா பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள 12,500-க்கும் மேற்பட்ட சாலைகள் தனிமைப்படுத்தப்பட்டன. இப்படி சீன அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் அங்கு கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்துள்ளது.

1newsnationuser1

Next Post

வரதட்சணை கொடுமை...கொலையா? தற்கொலையா?...போலீசார் விசாரணை...

Mon Mar 23 , 2020
திருவண்ணாமலை மாவட்டத்தில், திருமணமாகி 10 மாதம் ஆன நிலையில், கணவரின் குடும்பம் வரதட்சணை கொடுமை செய்ததால், பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசப்பாக்கம் எர்ணாமங்கலம் கிராமத்தை சார்ந்தவர் ஜெயபால் (வயது 27). அத்திமூர் கிராமத்தை சேர்ந்தவரான பாபு என்பவரின் மகள் சிவரஞ்சனி (வயது 22). இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு, ஜூன் மாதம் 14 ஆம் தேதி திருமணம் நடந்தது. சிவரஞ்சினியிடம் […]
Dowry cruelty ... murder? The police are investigating ...

You May Like