"ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு.. மகாராஷ்டிரா முதலிடம், 2வது இடத்தில் டெல்லி.. மற்ற மாநிலங்களின் நிலை என்ன..?

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 909 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 8000-ஐ தாண்டியுள்ளது. இந்த நிலையில் எந்தெந்த மாநிலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பார்க்கலாம்..

corona virus n

நாடு முழுவதும் அமலில் உள்ள 21 நாள் ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க பல்வேறு மாநிலங்கள் முடிவு செய்துள்ளன. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 909 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,356-ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மட்டும் புதிதாக 34 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக பலி எண்ணிக்கை 273-ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் மட்டும் அதிகபட்சமாக 1,761 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிலேயே அதிகம் பாதித்த மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.

அதற்கு அடுத்த இடத்தில் டெல்லி உள்ளது. டெல்லியில் இதுவரை 1,069 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 969 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் இதில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது.

corona doctor

ராஜஸ்தானில் கொரோனா பாதிப்பு 700-ஐ நெருங்கும் நிலையில், மத்தியப்பிரதேசத்தில் 532 பேரும், தெலங்கானாவில் 504 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே போல உத்தரப்பிரதேசத்தில் 452 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ள நிலையில், கேரளாவில் பாதிப்பு எண்ணிக்கை 364-ஆக உள்ளது.

கர்நாடாகவில் 214 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரில் 207 பேரும், ஹரியானாவில் 177 பேரும், பஞ்சாபில் 151 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்குவங்கத்தில் இதுவரை 124 பேரும், பீகாரில் 63 பேரும், ஒடிஷாவில் 50 பேரும், உத்தரகாண்டில் 35 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹிமாச்சல் பிரதேசத்தில் 32 பேருக்கும், அசாமில் 29 பேருக்கும் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

1newsnationuser1

Next Post

வீட்டில் தனிமைப்படுத்தபட்ட புதுமாப்பிள்ளை...திடீர் தற்கொலை...

Sun Apr 12 , 2020
சண்டிகாரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய புதுமாப்பிள்ளை தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள கிந்திரியா கிராமத்தை சேர்ந்தவர் ஆஷு (வயது 21). இவருக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் சண்டிகாரில் வேலை செய்து வந்த ஆஷு, ஊரடங்கு உத்தரவு காரணமாக சொந்த ஊருக்கு திரும்பினார். சண்டிகாரிலிருந்து வந்திருப்பதால் அவரை 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு […]
மன உளைச்சலில், மருத்துவமனை கழிவறையில் தற்கொலை செய்து கொண்ட கொரோனா நோயாளி!

You May Like