கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது என்ற இந்தோனேசிய அமைச்சரின் பேச்சுக்கு பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்தோனேசியாவில் 24 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1,496 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இந்தோனேசிய பாதுகாப்பு அமைச்சர் முகமது மஹ்புத் இந்த வார தொடக்கத்தில் உள்ளூர் பல்கலைக்கழகத்திற்கு ஆன்லைன் மூலம் உரையாற்றினார்.
அதில், அவர் ”நம் உடல்நலத்தில் கவனம் செலுத்தினால்தான் கொரோனா நிலைமையை சரிசெய்ய முடியும். கொரோனா உங்கள் மனைவியைப் போன்றது. ஆரம்பத்தில் நீங்கள் அதை கட்டுப்படுத்தவில்லை என்றால் பிறகு உங்களால் அது முடியாது. பிறகு வேறு வழி இல்லை. நீங்கள் அதனுடன் வாழ கற்றுக்கொள்வீர்கள்” என கூறினார். இதற்கு பல்வேறு சமூக அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.