மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

கொரோனா ஒரு பெருந்தொற்று நோய்.. உலக சுகாதார மையம் அறிவிப்பு.. இந்தியாவில் இதுவரை 73 பேருக்கு பாதிப்பு உறுதி..

கொரோனாவை பெருந்தொற்று நோயாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 73-ஆக உயர்ந்துள்ளது.

corona

சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 4,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 1, 20,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உலகம் முழுவதும் 110 நாடுகளில் இந்த வைரஸ் தொற்று பரவியுள்ளதால், இந்த கோவிட் 19 வைரஸ் தொற்றை, பெருந்தொற்று நோயாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. கொரோனாவை Pandemic என்று அறிவித்துள்ள அந்த நிறுவனம், இதற்கு எதிராக போராட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளது.

Pandemic அல்லது பெருந்தொற்றுநோய் என்பது ஒரு குறிப்பிட்ட நோய் ஒரு நாடு முழுக்க அல்லது உலகம் முழுக்க பரவினால் அதை குறிக்க பயன்படுத்தும் வார்த்தை ஆகும். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 110 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளதால், அதை pandemic அல்லது பெருந்தொற்றுநோய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

school closure corona

இதனிடையே கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 73-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டவர் 17 பேர் உட்பட, இந்தியர்கள் 56 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக கேரளாவில் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிராவில் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் 10 பேர், டெல்லியில் 6 பேர், கர்நாடகாவில் 4 பேர், லடாக்கில் 3 பேர், தமிழ்நாடு, ராஜஸ்தான், தெலங்கானா, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 56 இந்தியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹரியானாவில் 14 வெளிநாட்டவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 73-ஆக உயர்ந்துள்ளது.

1newsnationuser1

Next Post

ரஜினியை தொடர்ந்து விமர்சித்து வந்த சீமான்.. ரஜினியின் அரசியல் முடிவுக்கு வரவேற்பு..

Thu Mar 12 , 2020
ரஜினியின் அரசியல் குறித்து பொதுவாகவே கடுமையாக விமர்சித்து வரும் சீமான், அவரின் இன்றைய பேச்சுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் இன்று நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தனக்கு ஏற்பட்ட ஏமாற்றம் குறித்து விரிவாக விளக்கம் அளித்தார். மேலும் தான் 25 ஆண்டுகளாக அரசியலுக்கு வருகிறேன், எனப் பலர் கூறிவருகின்றனர் என்று தெரிவித்த ரஜினி, 2017-ம் […]
rajini seeman

You May Like