'ஒருவரின் முகத்தை அடித்து நொறுக்க செல்கிறேன்' ஊரடங்கை மீறி வெளியே சென்ற நபர்..! மனைவியின் நிர்வாண படத்தை ரூ.300க்கு விற்பனை செய்த கணவன்..! வரதட்சணை கொடுக்காததால், மனைவிக்கு நேர்ந்த கொடுமை..! கள்ளக்காதலுக்கு எதிரி..! ஏரியில் மிதந்த பெண்ணின் சடலம்..! பிஎம்டபிள்யூ சொகுசு காரை குப்பை வண்டியாக மாற்றிய உரிமையாளர்..! காரணம் இதுதானாம்..! வீடியோ உள்ளே..! 'நிவர்' புயல் தயார்..! உங்கள் வீட்டில் இவையெல்லாம் தயாரா..? பிரதமருக்கு கொரோனா கோவில் வளாகத்தில் ஆணின் அலறல் சத்தம்..! ஓடிச்சென்று பார்த்த மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..! போட்டிக்கு தயாராகும் 'PUBG மொபைல் இந்தியா' 6 கோடி பரிசு தொகை..! நாடக காதலில் சிக்கிய பெண்கள்..! லட்சக்கணக்கில் பணம் பறிப்பு..! நூதன முறையில் கொலை..! பகீர் பின்னணி..! முன்னாள் முதல்வரின் வீட்டை சுற்றி வெள்ளம் போல காட்சியளிக்கும் சென்னை கனமழை நிவர் புயல் மீட்பு நடவடிக்கைக்கு இந்திய ராணுவம் தயார்… டெல்டா மாவட்ட ஆழ்கடலில் எண்ணெய் கிணறா? எனக்கு தெரியவே தெரியாதே..! – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 24அடி முழு கொள்ளளவு… 22 அடியை நெருங்கியது செம்பரம்பாக்கம் ஏரி.. நினைவுக்கு வரும் 2015… காதல் மோகம் குறைந்ததால், கள்ளக்காதலிக்கு நேர்ந்த கொடுமை..! கர்ப்பிணியை அடித்தே கொலை செய்த காதலன்..! மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்க தனியாக நிவர் புயல் அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு

மத்திய அரசை முந்தும் மாநில அரசுகள் : இந்தியாவில் ஊரடங்கை நீட்டித்த 4-வது மாநிலம் எது தெரியுமா..?

கொரோனா வைரஸ் ஊரடங்கு தெலங்கானாவில் வரும் 30-ம் தேதி வரை நீடிக்கும் என்று அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.

chandra sekar rao

கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. இதுவரை இந்தியாவில் 7,500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 242 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சூழலில் வரும் 14-ம் தேதியுடன் முடிவடைய உள்ள ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று மாநில அரசுகள் பரிந்துரைத்துள்ளன.

இதனிடையே இன்று காலை பிரதமர் மோடி ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் அடுத்த 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் கூறியதாக தெரிகிறது. மேலும் கொரோனா நோய் பரவும் மையங்களாக உள்ள இடங்கள், அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் மேலும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்புள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

pm modi meeting

இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். அம்மாநிலத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசிய சந்திர சேகரராவ் “ இன்று காலை பிரதமர் மோடியுடனான ஆலோசனையின் போது நாங்கள் இந்த கோரிக்கையை மத்திய அரசுக்கு முன்வைத்தோம். மேலும் ஏப்ரல் 30 வரை ஊரங்கு நீட்டிக்கப்படும் என்றஅமைச்சரவை தீர்மானத்துடன் நாங்கள் பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்” என்று தெரிவித்தார்.

ஏற்கனவே ஒடிஷா, பஞ்சாப், மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது ஊரடங்கை நீட்டித்த 4-வது மாநிலம் தெலங்கானா. அம்மாநிலத்தில் 500 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

ஊரடங்கு காலத்தில் அவசர எண் 100க்கு அழைத்து உதவி கேட்ட பார்வையற்ற இளைஞர்!!!

Sat Apr 11 , 2020
மதுரை : ஊரடங்கு உத்தரவினால் எந்த வேலைக்கும் செல்ல முடியாமல் தவித்து வரும் நிலையில் யாரிடம் கேட்பது என்பது தெரியாமல் அவசர எண் 100க்கு அழைத்து பிரச்சனைகளை சொன்னார் பார்வையற்ற மாற்றுத்திறனாளி இளைஞர். மதுரை மாவட்டம் மேலவளவு சேக்கிபட்டிக்கு அருகே உள்ளது உடப்பன்பட்டி கிராமம். இங்கு தனது வயதான தாய் தந்தையுடன் வசித்துவருபவர் தான் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இளைஞரான சத்தியராஜ்.இவர் அன்றாட ஏதாவது வேலை செய்தால் மட்டுமே வாழ்வினை நடத்தமுடியும் […]
Madurai police help

You May Like