மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

கொரோனா வைரஸ்.. உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 21,295ஆக உயர்வு.. சீனாவை விட மற்ற நாடுகளில் உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்..?

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 21,295-ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக இத்தாலியில் 7,500 பேர் உயிரிழந்துள்ளனர்.

coronavirus

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் உஹானில் பரவத் தொடங்கிய கொரொனா வைரஸ் இன்று உலக நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதுவரை 180-க்கும் மேற்பட்ட நாடுகள் வைரஸ் பரவியுள்ளதால், நாளுக்கு நாள் உயிரிழப்பும், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 4,71,417 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 21,295-ஆக உயர்ந்துள்ளது. எனினும் கொரோனா பாதிப்பில் இருந்து 1,14,642 பேர் குணமடைந்துள்ளனர்.

சீனாவில் சுமார் 81,000 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,287ஆக உள்ளது. அதேநேரத்தில் அந்நாட்டில் சுமார் 74,000 பேர் குணமடைந்தன் மூலம் வைரஸ் பரவுதலை சீனா கட்டுப்படுத்தியுள்ளது.

ஆனால் மற்ற நாடுகளிலோ நிலைமை தலைகீழாக உள்ளது. உதாரணமாக உலகிலேயே அதிக உயிர்களை பலிகொடுத்த இத்தாலியில் கொரோனா காரணமாக 74,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 7,503 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் அங்கு 9,362 பேர் குணமடைந்துள்ளனர்.

italy corona

இதேபோல் அமெரிக்கா, ஸ்பெயின், ஈரான் போன்ற நாடுகளில் நோய் தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாகவே காணப்படுகிறது. உதாரணமாக சீனாவில் 81,000 பேர் பாதிக்கப்பட்டாலும், அங்கு சுமார் 74,000 பேர் குணமடைந்துள்ளனர்.

இதன் மூலம் அங்கு குணமடைவோர் வீதம் கிட்டத்தட்ட 90 சதவீதமாக உள்ளது. ஆனால் இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் கொரோனா பாதிப்பில் இருந்து வெறும் 10 சதவீதத்தினரே குணமடைவதால், அங்கு உயிரிழப்புகள் அதிகமாக ஏற்படுகின்றன என்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

1newsnationuser1

Next Post

கன்னியாகுமரியில் காய்ச்சல் காரணமாக ஒருவர் உயிரிழப்பு.. தமிழகத்தில் 2-வது கொரோனா உயிரிழப்பு..?

Thu Mar 26 , 2020
கன்னியாகுமரியில், காய்ச்சல் காரணமாக கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பெருந்தொற்று நோய் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவிலும் அதன் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த போதிலும், பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் இருக்கின்றன. இந்தியாவில் இதுவரை 13 பேர் பலியாகி உள்ள நிலையில், 650-க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு […]
கொரோனா

You May Like