இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

நாம் பயந்ததை விட அதி தீவிரமாகும் கொரோனா.. இதுவரை உலகம் முழுவதும் 18,906 பேர் பலி.. ஒரே நாளில் புதிதாக 1 லட்சம் பேர் பாதிப்பு..

கொரோனா பெருந்தொற்று நோய் நாம் பயந்ததை விட அதிதீவிரமாகி வருவதால் இதுவரை உலகம் முழுவதும் 18,906 பேர் பலியாகி உள்ளனர். நேற்று ஒரே நாளில் புதிதாக 1 லட்சம் பேருக்கு பாதிப்பு உறுதியானதால், சுமார் 4.2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

covid-19 corona

கொரோனா பெருந்தொற்று நோய் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. நோய் தொற்றை எப்படி கட்டுப்படுத்துவது என்ற தெரியாமல் வல்லரசு நாடுகள் தவித்து வரும் நிலையில், இந்த வைரஸ் நாம் நினைத்தை விட அதி வேகமாக பரவி வருகிறது.

இதுவரை 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதன் காரணமாக உலகம் முழுவதும் 4,22,966 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 18,906-ஆக அதிகரித்துள்ளது. எனினும் 1,09,143 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

சீனாவில் பரவத்தொடங்கினாலும், அங்கு கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில், மீண்டும் அந்நாட்டில் வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது.. சீனாவில் இதுவரை 81,218 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக நேற்று 47 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை அங்கு 3,281 பேர் பலியாகி உள்ளனர். எனினும் 73,650 பேர் குணமடைந்துள்ள நிலையில், 4,000-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சுமார் 1,300 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

corona

கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் இத்தாலியில் நேற்று ஒரே நாளில் புதிதாக 6,000 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 69,176ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 6,82-0 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவாக உலகிலேயே அதிக உயிரிழப்புகளை கொண்ட நாடாக இத்தாலி மாறியுள்ளது.

கொரோனா பாதித்த நாடுகளில் அமெரிக்கா 3வது இடத்தில் உள்ளது. அந்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 54,881-ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 200 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 782-ஆக உயர்ந்துள்ளது. ஆனால் அமெரிக்காவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் மற்ற நாடுகளை விட குறைவாகவே உள்ளது. இதுவரை 378 பேர் மட்டுமே கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.

Coronavirus_outbreak_infection-1

இதேபோல் ஸ்பெயின் நாட்டிலும் கொரோனாவில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு 42,058 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,991 பேர் உயிரிழந்துள்ளனர்.இத்தாலி, சீனாவை அடுத்து அதிக உயிரிழப்புகளை ஸ்பெயின் நாடு சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல் ஈரான், பிரான்ஸ், தென் கொரியா, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்த், யுனைடெட் கிங்டம், ஆஸ்திரியா, பெல்ஜியம், நார்வே, ஸ்வீடன், பிரேசில், கனடா, டென்மார்க் உள்ளிட்ட பல நாடுகளில் ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் சென்ற இளைஞர்கள்...போலீசாரை தாக்கியதால் துப்பாக்கியால் சுட்ட இன்ஸ்பெக்டர்...

Wed Mar 25 , 2020
திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியில், பாஸ்ட்புட் கடையில், சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஊழியரை, உருட்டுக்கட்டையால் அடித்துவிட்டு தப்பி ஓடியவர்களை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியில் உள்ள பாஸ்ட்புட் கடையில், நேற்று முன்தினம் திருவள்ளூர் மேட்டு காலனி பகுதியை சேர்ந்த அன்பழன் என்பவரது மகன் ஆகாஷ் (வயது 24) தனது நண்பர்கள் 5 பேருடன் சாப்பிட வந்துள்ளார். அதன்பின், சாப்பிட்டு பணம் தராமல் சென்றதால், அங்கு இருந்த ஊழியரான திருவள்ளூரை […]
chennai Inspector who fired after assaulting policemen ...

You May Like