அமலுக்கு வந்தது மத்திய அரசின் புதிய கோவிட் – 19 வழிகாட்டுதல்கள்.. எதற்கெல்லாம் அனுமதி.. எதற்கெல்லாம் தடை.. சசிகலா முன்கூட்டியே விடுதலையாக கூடாது.. தடை போடும் அதிமுக..? பின்னணி என்ன..? வயலில் வேலைபார்த்த 110 விவசாயிகள் கழுத்தை அறுத்து கொலை..! ஒரே இடத்தில் தகனம்..! ரூ.15,000 கோடி மதிப்பிலான முகேஷ் அம்பானியின் பங்களா..! 3 ஹெலிகாப்டர், மினி தியேட்டர், 600 ஊழியர்கள்.. இன்னும் பல..! வலுப்பெறும் புயல்.. அதிகனமழை கொட்ட போகும் 5 மாவட்டங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை.. காதலனை பிரிந்திருக்க முடியாமல் ரூ.32 கோடி செலவழித்த ஆலியா..! அப்படி என்ன செலவு பண்ணாரு..? RTGS பண பரிமாற்றத்தில் வந்தது நேரக் கட்டுப்பாடு..! முழு விவரங்கள் உள்ளே.. காதலிக்கு வேறு ஒருத்தன் அனுப்பிய குறுஞ்செய்தி..! அடுத்து நடந்த பயங்கரம்..! மின்கம்பி அறுந்து விழுந்து கைகளை பறிகொடுத்த பெண்..! வாயை திறக்காத மின்வாரியம்..! எப்போதும் போல ஒரே வார்த்தை தான்.. அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கிய மு.க அழகிரி.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. கள்ளத்தொடர்பை தட்டி கேட்ட மனைவி..! ஏட்டு மீது பாய்ந்த வழக்கு..! நாளை கரையை கடக்க உள்ள புரேவி புயல்.. 11 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக் செய்வது எப்படி..? இந்த நிறுவனத்தில் டிரைவர் முதல் பியூன் வரை எல்லோரும் கோடீஸ்வரர் தான்..! ஏன் தெரியுமா..?

கொரோனா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள் என்னென்ன..? வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி..?

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்று நோய் காரணமாக உலகம் முழுவதும் 3.8 லட்ச பேருக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 16,558-ஆக அதிகரித்துள்ளது.


முதலில் சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் காரணமாக அந்நாட்டில் 3,277 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் இத்தாலியில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 6,077-ஆக உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட சீனாவில் ஏற்பட்ட உயிரிழப்பை விட இரு மடங்கு அதிகமான உயிரிழப்பை இத்தாலி சந்தித்துள்ளது.

corona virus n

இப்படி நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பெருந்தொற்று நோயின் அறிகுறிகள் என்ன..? வைரஸ் தொற்றில் இருந்து எப்படி நம்மை தற்காத்து கொள்வது..? ஒருவேளை கொரோனா வந்தால் என்ன செய்ய வேண்டும்..? ஆகியவற்றை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அந்த அறிகுறிகள் தெரிய குறைந்தது 2 நாட்கள் முதல் அதிகபட்சம் 14 நாட்கள் வரை ஆகும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இன்னும் ஒரு சிலருக்கு 28 நாட்கள் கழித்து கூட கொரோனா அறிகுறிகள் தெரிய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

கொரோனாவின் முதல் அறிகுறி இருமல் தான். ஆனால் அது சாதாரண இருமலாக இல்லாமல், வலியுடன் கூடிய வறட்டு இருமலாக இருக்கும். ஒருவேளை கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, நீங்கள் இருமினால் உங்கள் மூச்சு குழல் அடைக்கும்.

இருமலின் போதே உங்கள் இதயம் லேசாக வலிக்கும். மூச்சு குழலில் இருமலின் போது ஊசி வைத்து குத்துவது போல வலி ஏற்படும். நெஞ்சு இறுக்கம் ஏற்பட்டு, மூச்சு விடுவதில் சிரமல் ஏற்படும். சில தொண்டை எரிச்சலும் ஏற்படும்.

coronavirus

அடுத்த அறிகுறி, காய்ச்சல். 99.5 ஃபாரன்ஹீட் உடல் வெப்பநிலை இருந்தால், அது இயல்பானது தான்.. பிரச்சனை இல்லை. அதற்கு மேல் வெப்பநிலை அதிகரித்தால் அது கொரோனாவின் அறிகுறியாகும்.

ஆனால் இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அர்த்தமில்லை. இந்த அறிகுறிகள் பிற பொதுவான வைரஸாலும் ஏற்படக்கூடியவை.

காய்ச்சல் இல்லாமல் நெஞ்சு வலி ஏற்பட்டு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம். சளி, காய்ச்சல், வறட்டு இருமல் தவிர ஒரு சிலருக்கு வித்தியாசமான அறிகுறிகளும் காணப்படுகின்றன. இந்த அறிகுறிகள் இருந்தால் நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது.

1

அஜீரண கோளாறு, பசியின்மை, தலைவலி, உடல் வலி, சோர்வு ஆகியவை கூட அறிகுறியாக இருக்கலாம். இதை எல்லாம் நீங்கள் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

எனினும் எந்த அறிகுறிகள் இல்லாமலும் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது. இந்த கொரோனா தொற்று தீவிரமாக இருந்தால், நிமோனியா, சிறுநீரக கோளாறு காரணமாக உயிரிழப்பும் ஏற்படலாம்.

கொரோனா வராமல் தற்காத்து கொள்வது எப்படி..?

  • உங்கள் கைகளை குறைந்தது 20 நொடிகள் சோப்பு பயன்படுத்தி நன்கு கழுவ வேண்டும்.
  • உங்கள் முகத்தை தொடுவதை தவிர்க்க வேண்டும்.
  • இருமல் அல்லது தும்மல் ஏற்படும் டிஷு பேப்பர்களை பயன்படுத்த வேண்டும்.
  • கைக்குட்டைகளை காட்டிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய டிஷூ பேப்பர்களை உபயோகிக்கலாம்.
  • காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்களிடம் தள்ளியே இருக்க வேண்டும்.
  • உங்களுக்கு காய்ச்சல், சளி இருந்தாலும் வெளியே போகாமல் வீட்டில் இருப்பது நல்லது.
  • வீட்டை விட்டு வெளியாறாமல் இருந்தாலே போதும் வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்து கொள்ளலாம்.

1newsnationuser1

Next Post

கூட்டம் கூட்டமாக சொந்த ஊருக்கு வெளியேறிய மக்கள்...அச்சத்தில் மருத்துவர்கள்...

Tue Mar 24 , 2020
கொரோனாவை கட்டுபடுத்த தமிழக அரசு ஊரடங்கு அறிவித்த நிலையில் சென்னையிலிருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றிருப்பது மருத்துவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து மக்களையும் அச்சுறுத்தி வரும் கொரோன நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருவதை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு இன்று மாலை 6 மணி முதல் ஊரடங்கை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது. ஊரடங்கு செயல்பாட்டில் இருந்தாலும் மளிகை கடைகள், மருந்தகங்கள், உணவகங்கள் இயங்க தடையில்லை என […]
The crowds fleeing their hometown ... Doctors in fear ...

You May Like