பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..?

அமேசான் காட்டில் வாழும் பெண்ணுக்கு கொரோனா வைரஸ்… அச்சத்தில் பழங்குடியினர்…

பிரேசிலில் உள்ள அமேசான் காட்டில் வாழும் பழங்குடி இனத்தை சேர்ந்த 20 வயது பெண்ணுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்ப்ட்டுள்ளது.

amazon corona

தற்போது உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் அனைத்துலக மக்களையும் அச்சுறுத்தி வருகிறது. இதுவரை 10 லட்சத்திற்க்கும் மேற்பட்ட மக்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 50ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் கொரோனா வைரஸ் தொற்றுக்கான் அறிகுறி இருந்தால் அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்திகொள்ளும்படி அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இருப்பினும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிலரை சுகாதாரத்துறை தேடி வருகிறது.

இந்நிலையில், பிரேசில் நாட்டிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் இதுவரை 8 ஆயிரத்து 44 பேருக்கு வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 324 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும், பிரேசிலில் உள்ள உலகின் மழைக்காடுகள் என வர்ணிக்கப்படும் அமேசான் காடுகளில் பல ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தங்களை தாமே கவனித்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் அமேசான் காடுகளில் வாழும் மக்களிடமும் பரவத்தொடங்கியுள்ளது.

அமேசானின் கொகமா பழங்குடியின இனத்தை சேர்ந்த 20 வயது நிரம்பிய இளம் பெண்ணுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்ப்ட்டுள்ளது. அப்பெண் சுகாதாரப்பணியாளாராக செயல்பட்டு வரும் நிலையில், அமேசானில் வாழும் பழங்குடியினர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அங்கு வாழும் மற்றவர்களுக்கும் வைரஸ் பரவும் அச்சம் நிலவி வருகிறது.

இதற்கிடையே அப்பெண் அவரது குடும்பத்தினருடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும், அமேசானில் கொரோனா வைரஸ் பரவியது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது.

1newsnationuser2

Next Post

திருப்பூரில் வீடு தேடிவரும் காய்கறி திட்டம்... மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன்...

Fri Apr 3 , 2020
திருப்பூரில், ஊரடங்கு உத்தரவை மீறி வீட்டை வெளியே வருபவர்களை தடுக்கும் வகையில், வீடு தேடிவரும் காய்கறிகள்’ எனும் திட்டத்தை அம்மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களை வாங்குவதை தவிர வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசு உத்தரவிட்டது. மேலும், காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் உள்ளிட்டவை காலை 6 மணி முதல் மதியம் […]
Vegetable Project starts in Tirupur

You May Like