இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

கொரோனா பெருந்தொற்று.. உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 16,500-ஐ தாண்டியது.. சுமார் 3.8 லட்சம் பேர் பாதிப்பு..

கொரோனா பெருந்தொற்று நோய் காரணமாக உலகம் முழுவதும் பலி எண்ணைக்கை 16,500-ஐ தாண்டியுள்ளது. சுமார் 3.8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

coronavirus

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்று நோய் இதுவரை 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதன் காரணமாக உலகம் முழுவதும் 3,81,761 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 16,558-ஆக அதிகரித்துள்ளது. எனினும் 1,02,429 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

சீனாவில் பரவத்தொடங்கினாலும் அந்நாட்டில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. சீனாவில் இதுவரை 81,171 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக நேற்று 7 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 3,277ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 73,159 பேர் குணமடைந்துள்ள நிலையில், 4,000-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சுமார் 1,500 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் இத்தாலியில் இதுவரை 63,927 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 6,077-ஆக உயர்ந்துள்ளது. இதனால் உலகிலேயே அதிக உயிரிழப்புகளை கொண்ட நாடாக இத்தாலி மாறியுள்ளது. எனினும், அங்கு 7,432 பேர் குணமடைந்தாலும் கூட, 50,000-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Coronavirus outbreak infection

கொரோனா பாதித்த நாடுகளில் அமெரிக்கா 3வது இடத்தில் உள்ளது. அந்நாட்டில் நேற்று ஒருநாளில் மட்டும் புதிதாக 2,411 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 46,145ஆக அதிகரித்துள்ளது. நேற்று 29 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 582-ஆக உயர்ந்துள்ளது. ஆனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் மற்ற நாடுகளை விட குறைவாகவே உள்ளது. இதுவரை 295 பேர் மட்டுமே கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.

இதேபோல் ஸ்பெயின், ஈரான் ஆகிய நாடுகளிலும் கொரோனா பாதிப்பால் சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளனர். இதே போல் பிரான்ஸ், தென் கொரியா, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்த், யுனைடெட் கிங்டம், ஆஸ்திரியா, பெல்ஜியம், நார்வே, ஸ்வீடன், பிரேசில், கனடா, டென்மார்க் உள்ளிட்ட பல நாடுகளில் ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

மனித நேயத்தை அதிகப்படுத்திவரும் பெருந்தொற்றான கொரோனா; தமிழகத்தில் உதவ முன்வரும் தன்னார்வலர்கள்

Tue Mar 24 , 2020
“முககவசத்தினை தாமே தயார் செய்து கோபி பேருந்து நிலையத்தில் மக்களுக்கு உதவும் தையல் கலைஞர்கள்”. சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் வேகமாக பரவிவருகிறது. உயிர்க்கொல்லியான இந்த வைரஸை கட்டுப்படுத்த பல முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்துவருகின்றனர். இருந்த போதும் நம் உயிரினைக்காப்பதோடு மனிதாபிமானத்தோடு மற்றவர்களும் உதவி செய்துவருகின்றனர் தன்னார்வலர்கள். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பல தன்னார்வலர்கள் இலவசமாக மாஸ்க், சானிடைசர் போன்றவற்றை வீடுகள் இல்லாமல் […]
mask 3

You May Like