ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..! கள்ள உறவை காட்டி கொடுத்த கேமரா..! காவலர்கள் பற்றி காவல்நிலையத்தில் புகார்..! 2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..! முதலிரவின் போது பயத்தில் புதுமண தம்பதிகள் ஓட்டம்..! பழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் எங்களுக்கு கொடுக்க வேண்டும்..! அண்ணாமலை

யாரும் பேசாத கொரோனாவின் மறுபக்கம்.. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா.?

கொரோனாவின் அச்சுறுத்தல் குறித்து தொடர்ந்து பேசிவரும் நமக்கு, அதன் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்து நம்பிக்கை அளிக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

coronavirus

சீனாவின் உகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று, தற்போது உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. இதுவரை இந்த வைரஸ் தொற்றுக்கு சுமார் 1,20,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 4000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அனைவருமே கொரோனாவின் அச்சுறுத்தல் மற்றும் இறப்பு விகிதம் குறித்து பேசிவரும் நிலையில், யாரும் கவனிக்காத மற்றொரு பக்கமும் உள்ளது. ஆம்.. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை நம்பிக்கை அளிப்பதாகவே அமைந்துள்ளது.

corona

சீனாவை பொறுத்தவரை, அங்கு 80,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்களில் 60,000-க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர் என்றும் அந்த அமைச்சகம் கூறியுள்ளது. எனவே சீனாவில் கோரோனா நோயாளிகளில் கிட்டத்தட்ட 70 சதவீத பேர் குணமடைந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

சர்வதேச அளவில் எடுத்துக்கொண்டால், ஜான் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வு முடிவுகளின் படி, உலகம் முழுவதும் 1,26,136 பேர் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 68,219 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மதிப்பிட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் மையம் தொடர்ச்சியாக, கொரோனா பாதிப்பு புள்ளிவிவரங்களை கண்காணித்து வருகிறது. அதன் சமீபத்திய மதிப்பீட்டின் படி, உலகம் முழுவதும் 50 சதவீதத்திற்கு மேல், கோரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.

அதேபோல் இந்தியாவின் முன்னணி ஆராய்ச்சியாளரும், விஞ்ஞானியுமான ககன் தீப் கான், கொரோனா பாதித்த 5-ல் 4 பேர் தாங்களாகவே குணமடைவதாக தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பால் ஏற்படும் சளி, காய்ச்சலை குணப்படுத்த பாராசிட்டாமல் மருந்தே போதும் என்றும், வேறு மருந்துகள் தேவையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

coronavirus

மேலும் கொரோனாவால் யாரும் அதிகமாக பயப்படவோ அல்லது கவலைப்படவோ தேவையில்லை என்று கூறிய அவர் கைகளை சுத்தமாக கழுவினாலே போதும் எனவும் கூறியுள்ளார். கிருமி நாசினிகளை கொண்டு தரைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று கூறிய அவர், உங்கள் முகத்தை தொடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

1newsnationuser1

Next Post

கொரோனா அச்சுறுத்தல்.. ஐபிஎல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளுக்கு தடை.. டெல்லி அரசு அறிவிப்பு..

Fri Mar 13 , 2020
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் உள்ளிட்ட எந்த போட்டிகளும் டெல்லியில் நடத்தப்படாது என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் “ கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும், அது பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், டெல்லியில் ஐபிஎல் போட்டிகள் உள்ளிட்ட எந்த போட்டிகளும் நடைபெறாது. இந்த போட்டிகளுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் இங்கே கூடுவார்கள். எங்கிருந்து, யார் […]
corona no ipl

You May Like