'ஒருவரின் முகத்தை அடித்து நொறுக்க செல்கிறேன்' ஊரடங்கை மீறி வெளியே சென்ற நபர்..! மனைவியின் நிர்வாண படத்தை ரூ.300க்கு விற்பனை செய்த கணவன்..! வரதட்சணை கொடுக்காததால், மனைவிக்கு நேர்ந்த கொடுமை..! கள்ளக்காதலுக்கு எதிரி..! ஏரியில் மிதந்த பெண்ணின் சடலம்..! பிஎம்டபிள்யூ சொகுசு காரை குப்பை வண்டியாக மாற்றிய உரிமையாளர்..! காரணம் இதுதானாம்..! வீடியோ உள்ளே..! 'நிவர்' புயல் தயார்..! உங்கள் வீட்டில் இவையெல்லாம் தயாரா..? பிரதமருக்கு கொரோனா கோவில் வளாகத்தில் ஆணின் அலறல் சத்தம்..! ஓடிச்சென்று பார்த்த மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..! போட்டிக்கு தயாராகும் 'PUBG மொபைல் இந்தியா' 6 கோடி பரிசு தொகை..! நாடக காதலில் சிக்கிய பெண்கள்..! லட்சக்கணக்கில் பணம் பறிப்பு..! நூதன முறையில் கொலை..! பகீர் பின்னணி..! முன்னாள் முதல்வரின் வீட்டை சுற்றி வெள்ளம் போல காட்சியளிக்கும் சென்னை கனமழை நிவர் புயல் மீட்பு நடவடிக்கைக்கு இந்திய ராணுவம் தயார்… டெல்டா மாவட்ட ஆழ்கடலில் எண்ணெய் கிணறா? எனக்கு தெரியவே தெரியாதே..! – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 24அடி முழு கொள்ளளவு… 22 அடியை நெருங்கியது செம்பரம்பாக்கம் ஏரி.. நினைவுக்கு வரும் 2015… காதல் மோகம் குறைந்ததால், கள்ளக்காதலிக்கு நேர்ந்த கொடுமை..! கர்ப்பிணியை அடித்தே கொலை செய்த காதலன்..! மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்க தனியாக நிவர் புயல் அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு

கொரோனா தீவிரம் எதிரொலி.. வரும் 31-ம் தேதி வரை பயணிகள் ரயில்கள் இயங்காது.. இந்திய ரயில்வே அறிவிப்பு..

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், வரும் 31-ம் தேதி வரை நாடு முழுவதும் பயணிகள் ரயில்கள் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

trains_cancelled

சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 140-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 13,069 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை, 326 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே கர்நாடகா, டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்தனர். அவர்கள் மூவருமே 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். இந்த சூழலில் பீகார், மும்பையில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளதால் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.

பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதன் பேரில் இன்று நாடு முழுவதும் 14 மணி நேர பொது ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பெரும்பாலான சாலைகள், நகரங்கள் ஆள்நடமாட்டமின்றி பாலைவனம் போல வெறிச்சோடி காணப்படுகின்றன.

janta curfew

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வரும் 31-ம் தேதி வரை பயணிகள் ரயில்கள் இயக்கப்படாது என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இன்று காலை ரயில்வே போர்டு உறுப்பினர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு வரும் மார்ச் 31-ம் தேதி வரை, நாடு முழுவதும் உள்ள பயணிகள் ரயில்கள் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சரக்கு ரயில்கள் மட்டும் தொடர்ந்து இயங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

trains cancelled

கடந்த 13-ம் தேதி ரயில்களில் பயணம் செய்த 16 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ரயில் பயணங்கள் மூலம் கொரோனா பரவுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. சர்வதேச விமானங்கள் இந்தியாவில் தரையிரங்க ஒரு வாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

இன்றிரவுடன் நிறைவடைய இருந்த சுய ஊரடங்கு.. நாளை காலை வரை தொடரும்.. தமிழக அரசு அறிவிப்பு..

Sun Mar 22 , 2020
இன்று இரவுடன் நிறைவடைய உள்ள சுய ஊரடங்கு, நாளை காலை வரை தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதன் பேரில் இன்று நாடு முழுவதும் 14 மணி நேர பொது ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பெரும்பாலான சாலைகள், நகரங்கள் ஆள்நடமாட்டமின்றி பாலைவனம் போல வெறிச்சோடி காணப்படுகின்றன. அந்த வகையில் தமிழநாட்டில் உள்ள […]
janatha curfew n

You May Like