‘பப்ஜி’ யால் வந்த விபரீதம்! சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்த அண்ணன் கைது!

ஆன்லைன் கேம் விளையாட்டின் மூலம் சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்து அந்த சிறுமியின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து மிரட்டி வந்த சிறுமியின் உறவினரை காவல்துறை கைது செய்துள்ளது. சென்னையைச் சார்ந்த பெண் ஒருவர் தனது 16 வயது மகளுடன் வசித்து வருகிறார். அந்தப் பெண் அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். அவரது கணவர் வெளிநாட்டில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தின் போது சிறுமியை அவரது சித்தப்பா வீட்டில் தங்க வைத்துள்ளனர். அப்போது சிறுமியின் சித்தப்பா மகன் இவருக்கு பப்ஜி கேம் விளையாட கற்றுக் கொடுத்துள்ளார். மேலும் பப்ஜி விளையாட்டின் மூலம் சாட் செய்யவும் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அந்தச் சிறுமியும் அண்ணன் முறை தானே என்ற விதத்தில் அவருடன் நட்பாக பழகியிருக்கிறார். ஆனால் அந்த இளைஞர் சிறுமியை பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாக்கி அவருக்கு பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். இதற்கு அந்த சிறுமி மறுக்கவே அவருடைய புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து வீடியோவாகவும் புகைப்படமாகவும் அனுப்பி சிறுமிக்கு மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் இதை வெளியே சொன்னால் அம்மா மற்றும் அப்பா மீது ஆசிட் அடிப்பேன் என்றும் மிரட்டி இருக்கிறார். சிறுமி, படிக்கும் பள்ளியில் அல்லது வேறு நண்பர்கள் யாரிடமும் இது பற்றி தெரிவித்து விடுவாரோ என்ற பயத்தில் சிறுமி பள்ளிக்கு செல்ல கூடாது மற்றும் யாரிடமும் பேசக்கூடாது போன்ற கட்டுப்பாடுகளை விதித்து தொடர்ந்து பாலியல் வன்கொடுமை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

சிறுமியின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதை கவனித்த அவரது தாயார் சிறுமியிடம் இது பற்றி கேட்டிருக்கிறார். ஆனால் சிறுமி மௌனமாகவே இருந்ததை கண்டு பயந்த அவரது தாயார் தனது தோழியின் உதவியுடன் நடந்த சம்பவங்களை பற்றி அறிந்து அதிர்ந்து போய் இருக்கிறார். இது தொடர்பாக 2021 ஆம் ஆண்டு அருகில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் ஆனால் அங்கு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் அமுதா இருதரப்புக்கும் இடையே சமரசம் பேசி அனுப்பி வைத்துள்ளார். மேலும் 2022 ஆம் ஆண்டு காவல்துறையிடம் புகார் அளித்த போது அது தொடர்பான நடவடிக்கைகளிலும் ஆய்வாளர் அமுதா சிறுமியின் பெற்றோரை மீண்டும் மிரட்டியுள்ளார். இதனால் உயர் நீதிமன்றத்தின் உதவியை சிறுமியின் பெற்றோர் நாடி உள்ளனர். இதனை கவனத்தில் எடுத்துக் கொண்ட உயர் நீதிமன்றம் கடந்த 10 நாட்களாக நடந்த சம்பவங்கள் அத்தனையும் ஒப்பிட்டுப் பார்த்து இந்த வழக்கில் சிறுமியின் உறவினரான அந்த இளைஞர் தான் குற்றவாளி என உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் ஒருதலைப் பட்சமாக செயல்பட்ட காவல்துறை ஆய்வாளர் அமுதா மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சிறுமியின் பெற்றோர் கோரிக்கை வைத்தனர். இந்த வழக்கில் குற்றவாளியான அந்த இளைஞரின் பெற்றோர் சமீபத்தில் மிகப்பெரிய நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்ட ஒரு நிறுவனத்தின் தரகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அவர்கள் தங்களது பண பலத்தை பயன்படுத்தி தங்களது மகனை இவ்வளவு நாளும் தப்பிக்க வைத்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது .

Baskar

Next Post

மக்களே...! இந்த ஆவணம் இருந்தால் மட்டுமே நீங்கள் ஓட்டு போட முடியும்...! தேர்தல் ஆணையம் அதிரடி...!

Fri Feb 17 , 2023
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்களிக்க ஆதார் அட்டை உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்; ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள அனைத்து வாக்காளர்களும், அவர்கள் வாக்களிப்பதற்கு முன்னர், வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க வேண்டும். வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை […]

You May Like