கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுணனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், மேலும் 3 திமுக எம்.எல்.ஏக்களும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிமுக-விலும் அமைச்சர் கே.அன்பழகன் உட்பட 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில்,கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ச்சுனனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மகள், மருமகன், பேத்திக்கு கடந்த வாரம் கொரோனா உறுதியான நிலையில் தற்போது அர்ச்சுனனுக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.